பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பூர்ணசந்திரோதயம்-1 வாலாட்டாமல் அப்படி அப்படியே ஒடுங்கிப் போவார்கள். அதன் பிறகு எவருடைய இடைஞ்சலும் இன்றி நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். அது ஒரு பெரிய அநுகூலம் அல்லவா. அதைக் கருதியாவது நீங்கள் இளவரசருடைய கருத்துக்கு இணங்குவீர்கள் என்று நம்புகிறேன். அவருக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட ஒரு பட்டமகிஷி இப்போது இருக்கிறாள். ஆனாலும், அவள் பெயருக்கு மாத்திரம் நாயகியே யொழிய வேறல்ல. அவருடைய ஆசையை யெல்லாம் திரட்டி, ஒருத்தியினிடத்தில் வைப்பதற்கு அவருடைய மனசுக்கு உகந்த ஸ்திரீ இதுவரையில் வாய்க்க வில்லை. அந்த ஆசை நாயகியின் ஸ்தானத்தில் உங்களை வைக்க, அவர் பரிபூரணமாக ஆவல் கொண்டிருக்கிறார். அவருக்குச் சொந்தமானசகல செல்வத்தையும் செல்வாக்கையும் அதிகாரத்தையும் உங்களுடைய இவர் டம்போல நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய பிரியம் எப்படியோ அப்படியே அவர் இனி எந்த விஷயத்திலும் நடந்து கொள்வார். ஆகையால், இந்த ராஜாங்கத்தில் பெயருக்கு மாத்திரம் அவர் மகாராஜனாக இருப்பார்; உண்மையில் நீங்களே மகாராஜனாக இருந்து சகலமான அதிகாரங்களையும் நடத்தி வரலாம். ஆகையால், நீங்கள் இப் படிப் பட்ட எவருக்கும் கிடைக்கத்தகாத சம்பத்தையும் பாக்கியத்தையும் கருதி, சம்மதம் என்ற வார்த்தையைச் சொல்லுங்கள். அவர் உடனே நேரில் வந்து உங்களுடைய மனம் திருப்தியடையும்படி உறுதி செய்து கொடுப்பார் என்று நிரம்பவும் உருக்கமாகவும் நயமாகவும் கூறினாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் கலகலத்துக் கலங்கிப் போனாள். ஆனாலும், தனது சஞ்சலத்தை வெளியில் காட்டாமல் மறைத்துக்கொண்டு அசட்டுப் புன்னகை செய்து, “ஏதேது! இந்த இளவரசர் விரிக்கும் பொன்வலையி லிருந்து நான் என்னை விடுவித்துக் கொள்ள முடியாது போலிருக்கிறது. அவரால் அனுப்பப்பட்ட தூதர் சொல்லும்