பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 321 வார்த்தைகளுக்கே உத்தரம் சொல்ல மாட்டாமல் நான் விழிக்க வேண்டியிருக்கிறதே. இன்னம் அவரே நேரில் வந்திருப்பாரானால், நான் உடனே அவருக்கு அடிமையாகி விடவே நேர்ந்துவிடும். அதன்பிறகு என்னுடைய சொல்லின் படி அவர் நடக்கப் போகிறாரோ, அல்லது, அவருடைய சொல்லின்படி நான் நடக்க நேருகிறதோ, அது அப்போதுதான் தெரியும். ஆனால், இன்னொரு விஷயம். நானோ இந்த ஊருக்குப் புதியவள். இந்த ஊர் இளவரசர் கறுப்பாக இருப்பாரோ சிவப்பாக இருப்பாரோ என்பது கூட எனக்குத் தெரியாது. நீங்கள் பிரஸ்தாபிக்கும் விஷயமோ மகா பெரிய விஷயம். இருவரும் பரஸ்பரம் ஒருவரிடத் தொருவர் மன இளக்கம் அடைந்து தானாகக் கனிந்து ஒன்றுபட வேண்டும். அவர் ஒருவேளை என்னைப் பார்த்தும் இருக்கலாம்; என்னுடைய குணாதிசயங்களைப் பற்றிய விவரங்களை யெல்லாம் நன்றாகக் கேள்வியுற்றும் இருக்கலாம். நான் அவரைப் பார்த்தது இல்லை. அவரைப்பற்றி இதுவரையில் மனதால்கூட நினைத்ததே இல்லை. ஆகையால், என்னுடைய மனம் அவருடைய மனம் போல இன்னமும் அவ்வளவு பரிபக்குவ நிலைமைக்கு வரவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட பெருத்த பாக்கியம் எனக்கு வந்து நேரப்போகிறது என்பதை நான் கொஞ்சமாகிலும் எதிர்பார்த் திருந்தால், நான் இந்த விஷயத்தில் ஒருமுடிவானதீர்மானத்தைச் செய்து வைத்திருப்பேன். ஆனால், இவர்கள் எல்லோரும் என் விஷயத்தில் பந்தயம் வைத்திருப்பதும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினம் என்னிடம் வரப் போகிறார்களென்பதும் எனக்குத் தெரியும். அதை நான் ஒரு குழந்தைப் பிள்ளையின் விளையாட்டு என்று நினைத்து அலட்சியமாக மதித்திருந்தேன். அதிலிருந்து இப்பேர்ப்பட்ட அபாயங்களும் நன்மைகளும் ஏற்படும் என்பதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சூரக் கோட்டைப் பாளையக்காரர் முதலிய துஷ்டர்களுடைய வசத்தில் அகப்பட்டு இழிவடைவதைவிட இளவரசருக்கு ,ణో, ~22