பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பூர்ணசந்திரோதயம்-1 அலங்காரமாகவும் சிங்காரிக்கப்பட்டிருந்த ஒரு ஹாலிற்குள் நுழைய, அவ்விடத்தில் ஒரு லோபாவின்மீது உட்கார்ந்திருந்த ஒரு யெளவன புருஷன் கமலத்தை அன்பாக வரவேற்றான். அவனது வயது இருபத்திரண்டு இருக்கலாம். வசீகரமான முகமும், அழகும் நெட்டையுமான சிவந்த ஒற்றை நாடி உடம்பும் பெற்றிருந்த அந்த யெளவனபுருஷனது முகம் மிகுந்த துயரத்தைக் காண்பித்தது. அவன் பேசிய போது, அவனது வார்த்தைகளும் விசனகரமாகவே தோன்றின. இருந்தாலும், அவன் கமலத்தின் விஷயத்தில் மனப்பூர்வமான அநுதாபமும் இரக்கமும் கொண்டவனாகவே வார்த்தையாடினான். அந்த மடந்தை இன்ன கருத்தோடு தன்னிடத்தில் பேச விரும்புகிறாளென்பதை அவன் சேவகனிடத்திலிருந்தே அறிந்து கொண்டவனாதலால், கமலத்தைக் கண்டவுடனே அவன் அந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் தொடங்கி சோமசுந்தரம் பிள்ளை என்ற பெயரையே தான் அதுகாறும் கேட்டதில்லை என்றும், அந்தப் பெயருடைய மனிதரே அந்த வீட்டில் இல்லை யென்றும், அந்தப் பெயருக்கு கடிதம் வந்ததில்லை என்றும் நிச்சயமாகக் கூறினான். அவன் அவளிடத்தில் மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டானானாலும் அவன் தனது விசனத்தில் மூழ்கிப் போயிருந்தமையால், அவளிடத்தில் அதிகமாக சம்பாஷணையை வளர்க்க அவனுக்கு விருப்பமில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. ஆகவே தான் அநாவசியமாக அவ்விடத்தில் தங்கி அவரை வருத்தக் கூடாதென்ற நயத்தை உணர்ந்தவளாதலால் கமலம் உடனே அவனிடத்தில் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டு வெளியில் வந்துவிட்டாள். அதன்பிறகு தான் என்ன யுக்தி செய்வது எங்கே செல்வது என்ற கேள்விகள் அவளது மனத்தில் எழுந்து வருத்தின. தஞ்சையில் எந்த பாங்கியிலிருந்து தங்களுக்குப்பணம் கொடுக்க உத்தரவு வந்து கொண்டிருந்ததோ, அந்த பாங்கியின் சொந்தக்காரரிடத்தில் போய் விசாரிப்பதைத் தவிர, வேறே