பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பூர்ணசந்திரோதயம்-1 சொல்லுகிறபடி, அவர் இங்கே வரும்போது அவரிடத்தில் எவ்வித நிபந்தனையும் பேசமாட்டேன். அவருடைய பிரியப்படி என்னை நடத்திக்கொள்ளட்டும். அந்தச் சங்கதி இருக்க, தாங்கள் இன்னார் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டாமா? தங்களுடைய பெயரென்ன? தங்களுடைய முக தரிசனம் எனக்குக் கிடைக்கக் கூடாதா? என்னுடைய மானமும் உயிரும் சகலமும் இப்போது உங்களுடைய கையில் நான் ஒப்புவித்து விட்டேனே. தாங்கள் மாத்திரம் இன்னமும் ஜாக்கிரதையாகவே மறைந்திருக்கிறீர்களே' என்றாள். அதைக் கேட்ட அந்தப்பெருமாட்டி, "இதுவரையில்தான் ஜாக்கிரதை, இனிமேல் எனக்குக் கவலையில்லை. நீங்கள் எப்போதுவாக்குக்கொடுத்துவிட்டீர்களோ அதிலிருந்து நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். ஆகையால், நான் என்னுடைய அங்கியை விலக்கிவிடுகிறேன்' என்று கூறிய வண்ணம், தன்மீது மறைத்துக்கொண்டிருந்த பனாரீஸ் பட்டு அங்கியை விலக்கி அப்பால் போட, அதற்குள் இளவரசர் கலகலவென்று சந்தோஷமாக நகைத்துக்கொண்டு உட்கார்ந் திருந்ததைக்கண்ட பூர்ணசந்திரோதயம் திடுக்கிட்டு பிரமித்து ஸ்தம்பித்துத் தனது கண்களையே நம்பாமல் பேச்சு மூச்சற்று - சிரத்தைக் குனிய வைத்துக்கொண்டு சித்திரப் பாவைபோல நாணமே வடிவமாக நின்றாள். அவ்வாறு தத்தளித்து நின்ற தோகை மடமயிலை இளவரசர் மோக ஆவேசப் பார்வையாகப் பார்த்து, 'கண்ணே பூர்ண சந்திரோதயம்! வா இப்படி என் பக்கத்தில்; என்மேல் உனக்குக் கோபமா? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? என் ராஜாத்தி யல்லவா நீ, எங்கே இப்படி வந்து என்மடியின்மேல் உட்கார்ந்து கொள். ஒரு நிமிஷத்துக்குமுன் நீ செய்த வாக்குறுதியை நீ மனப்பூர்வமான இஷ்டத்தோடு செய்தாய் என்பதை, காரியத்தில் செய்துகாட்ட இதுதான் சரியான காலம். அடீ கண்மணி கோபித்துக்கொள்ளாதே; வா இப்படி என்று மிகவும்