பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 325 உருக்கமாகவும் வாஞ்சையாகவும் கூறி அழைக்க, ೫೧/05) சொற்களைக்கேட்டபூர்ணசந்திரோதயம் முன்னிலும் அதிகமாக நாணிக்கோணித் தவிக்கலானாள். அவளது திரேகம் காற் றினால் அசையும் மாந்தளிர்போல வெடவெட வென்று நடுங்குகிறது. அடக்கி அடக்கி அடிக்கடி பெருமூச்சு விடுவதால், அவளது ஏந்தெழில் மார்பு படீரெனத் தெறித்துவிடுமோ வென அஞ்சுமாறு வீங்கி வீங்கி அடங்குகிறது. அவளது அங்கங்கள் யாவும் நெக்குவிட்டுத் தளர்ந்து நைந்து இளகி உருகுகின்றன. கண்கள் இரண்டும் கலங்கிப் பளபளவென்று ஜ்வலிக் கின்றன. மாதுளைப் பூவைப்போலச் சிவந்து கனிந்து மகா வசீகரமாகத் தோன்றிய அவளது நிகரற்ற அதரங்களில் அமிர்தரசம் ததும்புகிறது. அதுகாறும் தனக்கு இணை தானே எனவும், ஒரு மண்டலேசுவரனது பட்டமகிஷி போலவும் கம்பீரமான தோற்றத்தோடு மகா வசீகரமாகக் காணப்பட்ட அந்த அதிசுந்தர மோகனாங்கி அவ்வாறு அடங்கி ஒடுங்கி நாணம், மடம், அச்சம் முதலிய அணிகள் இலங்க நின்ற அந்த அற்புதக் காட்சி முன்னிலும் பதினாயிரம் மடங்கு அதிக வசீகரமாகவும், காண்போது மனதை மயக்கி, உடலை உருக்கி, உயிரைக் கருக்கி, அறிவைக் கலக்கி, உன்மத்தங் கொள்ளச் செய்வதாக இருந்தது. பல நாட்களாக அவளது அபாரமான வனப்பையும் லட்சணங்களையும் உன்னி உன்னி மோகலாகிரி கொண்டு ஏங்கித் தவித்திருந்த இளவரசர், ஒரு நாழிகை நேரமாக அவளண்டையில் நெருங்கி இருந்து அவளது ஒவ்வோர் அங்கத்தின் கண்கொள்ள அழகையும் கண்டு கட்டிலடங்கா வேட்கையுற்றுக் காதல் தீயான பெருத்த ஜாடராக்கினியில் புதைபட்டுக் கிடந்தவராதலால், அவரது பார்வைக்கு அந்த மின்னாள் நிலைகலங்கித் தனது இயற்கைத் துணியை இழந்து அடங்கி ஒடுங்கி அழகின் திரளாக நின்ற காட்சி தெய்வலோகக் காட்சியாக தோன்றியது. அவளது அமைப்பு அதுகாறும் கண்டறியாத ஒப்புயர்வற்ற அபார சிருஷ்டியாகக் காணப்பட்டது. அவள் தமக்கு அருகில் நெருங்காமல்