பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பூர்ணசந்திரோதயம்-1 சிறிது துரத்திற்கு அப்பால் நின்றது, அவரது உயிரே உடலைவிட்டுப் பிரிந்து போய்த் தூரத்தில் நின்றது போல இருந்தது. ஆகவே, அவள் அவ்வாறு நின்ற ஒவ்வோர் இமைப்பொழுதும் அவருக்கு ஒவ்வொரு கற்பகாலம்போலத் தோன்றி அவரது மனதை வருத்திப் புண்படுத்தியது. அவர் அவளைத் தன்னிடம் வரும்படி அழைத்ததற்கு இணங்கி வராமல் மெளனம் சாதித்து நிற்கவே, அவரது மனவேதனை அசாத்தியமாகப் பெருகிவிட்டது. அவர் முன்னிலும் பதினாயிரம் மடங்கு அதிக உருக்கமாகவும் வாத்சல்யத்தோடும் பிரேமையோடும் அவளை விளித்து, 'தங்கமே என் கண்மணியே! என் ராஜாத்தி உன் உயிர் துடிக்கிறதை நீ உணரவில்லையா என்னுடைய மனம் எவ்வளவு பாடுபடுகிற தென்பது உனக்குத் தெரியவில்லையா? என் உடம்பு தவிக்கிற தவிப்பை நீ பார்க்கவில்லையா? நீ என்மேல் நிரம் பவும் கோபம் கொண்டிருக்கிறாய் என்பது நன்றாகத் தெரிகிறது. உன் விஷயத்தில் நான் சில தவறுகள் செய்துவிட்டேன் என்பதை நானே ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனாலும், உன்மேல் நான் வைத்துள்ள வாஞ்சையிலும் உன்னை நான் அடைந்து என்னுடைய உடல், பொருள், ஆவி ஆகிய சகலத்தையும் உனக்கே தத்தம் செய்துவிட வேண்டுமென்ற ஆவலினாலும், தூண்டப்பட்டே நான் உன் விஷயத்தில் சில தவறுகள் செய்ய நேர்ந்தது. எல்லாப் பிழையையும் பொறுத்துக் கொண்டு என்னைக் காத்துரகவிப்பது உன்னைச் சேர்ந்த பொறுப்பு. எங்கே இப்படி என் பக்கத்தில் வந்து, வாயைத் திறந்து ஒருவார்த்தை சொல். பூர்ணசந்திரோதயம் மனசால் நினைக்குமுன் நூற்றுக்கணக்கான ராஜஸ்திரீகளும், ஆயிரக்கணக்கான ஏவலரும், கோடிக்கணக்கான பிரஜைகளும் அடிபணிந்து காலால் இடும் வேலையைத் தலையால் நிறைவேற்றும் செல்வாக்குடைய இந்த தேசத்து மகாராஜனான நான் என்னுடைய கம்பீரத்தையும் மேன்மையையும் விலக்கிவிட்டு உன்னிடத்தில் தாசாநுதாசனாக நடந்த கொள்ள சம்மதித்து இவ்வளவு தூரம் பணிகிறேன் என்பதை நீ கொஞ்ச