பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பூர்ணசந்திரோதயம்-1 எங்களைப் போன்ற மகாராஜாக்கள் எல்லாம் மாறுவேஷம் பூண்டு நகர பரிசோதனைக்குப் போவது சர்வ சாதாரண காரியந்தானே. அப்படிச் செய்வது மிகவும் இன்பகரமான ஒரு கடமை அல்லவா! அதில் எங்களுக்குக் கொஞ்சமும் பிரயாசையே இல்லை. அதுவும், இப்பேர்ப்பட்ட நிகரற்ற அழகும், மாசற்ற குணமும் இணையற்ற புத்திசாதுரியமும் சரஸகுணமும் நிறைந்துள்ள பெண்ணரசியின் தரிசனமும் வரங்களும் பெறுவதற்கு நான் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும், அது எனக்கு ஒரு பொருட்டாகத் தோன்றுமா? உன்னைக் கோரி நான் எவ்வளவு பாடுகள் பட்டாலும், துன்பங்கள் அநுபவித்தாலும் அவைகள் எனக்கு இன்பகரமாக இருக்குமேயன்றிக் கொஞ்சமும் துன்பகரமாக இரா. அதுவும் தவிர, இனி என்னுடைய ஆயுட்காலபரியந்தம் என்னுடன்கூட இருந்து காமதேனுவைப் போலவும் கற்பகத்தருவைப் போலவும், தேவாமிருதம் போலவும், எனக்கு எந்தெந்த சமயத்தில் எவ்விதமான இன்பம் தேவையோ அதை உதவி, சதாகாலமும் எனக்கு ரம்மியம் கொடுக்கும் வல்லமை வாய்ந்த இப் படிப்பட்ட பெண் தெய்வத்தை நான் மற்றவர்களைப் போலக் கேவலமாக மதித்து என்னிடம் வரும் படி உத்தரவு அனுப்புவது ஒழுங்காகுமா? அந்த தெய்வம் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு நானே நேரில் வந்து பயபக்தி விநயத்தோடு பணிந்து வழிபட்டு வேண்டிக் கொண்டு தெய்வத்தினிடம் வரப்பிரஸ்ாதம் பெற்றால் தான், அது நீடித்து நிற்பதோடு எப்போதும் இன்பகரமாக இருக்கும். ஆகையால், நான் இப்போது உன் விஷயத்தில் எடுத்துக் கொண்டது ஒரு பிர்யாசையாகவாவது என் கண்ணியத்துக்குக் குறைந்ததாகவாவது எண்ணவே நியாயமில்லை' என்றார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் முன்னிலும் அதிகரித்த சஞ்சலமும் இன்பமும்துன்பமும் அடைந்தவளாய், "மகாராஜா வுடைய குணாதிசயங்களைப் பற்றி நான் அதிகமாக ஒன்றும்