பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பூர்ணசந்திரோதயம்-1 தெளித்து எல்லோரையும் இன்பசாகரத்தில் ஆழ்த்திக்கொன் டிருந்தான். நிலவு பட்டப்பகல் போல எரித்துக் கொண்டி ருந்தது. அந்த ஊரின் வழியாகச் சென்ற ராஜபாட்டை அந்த மாளிகைக்கு நெடுந்துாரத்திற்கு அப்பாலிருந்தமையால், தனியாக இருந்த அந்த மாளிகையில் என்ன நடக்கிறதென்பதை வழிப் போக்கர் கவனிக்க ஏதுவில்லா திருந்தது. கீழே இறக்கிவிடப்பட்ட பட்டு நூலேணி இரண்டொரு நிமிஷம் வரையில் அசைந்து அதன்பிறகு விறைப்பாகவும் நிமிர்வாகவும் நின்றது. சிறிது நேரத்தில் ஜன்னலிற்கு வெளியில் ஒருதலை தென்பட்டது. உடனே ஒரு மனிதரது முழு வடிவமும் புலப்பட்டது. அந்த மனிதர் நூலேணியின் வழியாக ஏறி ஜன்னலுக்கு மேலேயிருந்த திறப்பை அடைந்து, அதற்குள் புகுந்து உட்புறத்தில் நகர்த்தி வைக்கப்பட்டிருந்த மேஜையின் மீது காலை வைத்து இறங்கி உள்ளே வந்து சேர்ந்தார். உடனே நூலேணி மேலே உயர்த்தப்பட்டது. ஜன்னலும் திறப்பும் கண்ணாடிக் கதவுகளால் பழையபடி மூடப்பட்டுப் போயின. அடுத்த நிமிஷத்தில் அந்தக் கள்ளக் காதலர் இருவரும் கரை கடந்த பிரேமையும் மோகஆவேசமும் கொண்டவராய் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து இறுகத் தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டனர். அந்தப் பெண்மணி எப்படி ரதிதேவிபோல இருந்தாளோ, அதுபோல, அந்த மனிதரும் மன்மதன் போன்ற அழகுடையவராக இருந்தார். அவரது வயது சுமார் நாற்பதாகி இருந்தாலும் நல்ல கட்டான தேகமுடைய வராதலால் சுமார் 32 அல்லது 33 வயதடைந்தவர் போலக் காணப்பட்டார். அவரது முகம் மிகவும் வசீகரமாகவும், அவரது சொல் அமிர்தம்போல இனிமையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. அவர்நல்ல புத்தி தீrண்யம் உடையவராகவும் தமது வாக்கு நயத்தாலும், இளகிய தன்மையாலும் தேக அழகினாலும் எப்படிப்பட்ட ஸ்திரீயின் மனதையும் மயக்கக்கூடிய சரஸ்குன செளந்தரிய புருஷராக இருந்தார்.