பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 துடிதுடித்திருந்த அவளது புருஷர் கீழேயிருந்த ஆட்களுள் ஒருவனை அழைத்துத் தமது பெட்டிகளெல்லாம் ஆயத்தமாகி விட்டனவாவென்று விசாரிக்க, அவன் சகலமானசாமான்களும் வண்டியில் வைத்துக் கட்டப்பட்டனவென்றும், உடனே புறப்படலாமென்றும் மறுமொழி கூறினான். அவர் உடனே அங்கிருந்த வேலைக்காரிகளை நோக்கி, அங்கே தயாராகப் பூட்டிவைக்கப்பட்டிருந்த தமது மனைவியின் பெட்டிகளையும் படுக்கைகளையும் எடுத்துக்கொண்டு போய் வண்டியில் வைத்துவிட்டு வரும்படி உத்தரவுசெய்ய, அவர்கள் அவ்வாறே எடுத்துக்கொண்டு போகத் தொடங்கினர். கால்நாழிகை யில் மேன்மாடத்திலிருந்த பிரயாண சாமான்களெல்லாம், வண்டிக்குப் போய்ச் சேர்ந்து விட்டன. வெந்நீர்த் தவலையில் இருந்த நகைப்பெட்டியும் போய்ச் சேர்ந்தது. ஆனால், அவர்களால் எடுத்துக்கொண்டு போகப்படாமல் மிகுதியாக நின்ற சாமான்களையெல்லாம் எடுத்து ஒழுங்காக வைக்கும் படியும், தாங்கள் திரும்பி வருகிற வரையில் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படியும், அந்த வீட்டின் எஜமானர் பணிமக்களுக்கு உத்தரவு செய்தவராய்ப் புறப்பட்டு வரும்படி தமது மனைவியை அழைத்தார். ஆனால், அந்தப் பெண் புறப்பட்டு அவரோடு வராமல், அங்குமிங்கும் ஒடி, அவ்விடத்தில் சிதறிக்கிடந்த சாமான்களையெல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்த்தவளாய் காலஹரணம் செய்து கொண்டிருந்தாள். அவளது புருஷர் வரவர அதிகமாகத் துடித்து, 'ஆய்விட்டதா? இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது? நேரமாகிறதே! புறப்படு!’ என்று துரிதப்படுத்தப்படுத்த, அவள் அங்கு மிங்கும் ஒடுவது அதிகரித்தது. மூன்றாவது நான்காவது துரித காலத்தில் பாட்டுப் பாடுவது போல, அவள் முன்னிலும் அதிக சுறுசுறுப்பாகப் போய்ப் பெட்டியைத் திறந்து, படுக்கையைப் புரட்டி, பாத்திரத்தைக் கவிழ்த்து, சாமான் களைக் கொட்டி பட்சி பறப்பதுபோலப் பாய்ந்து பாய்ந்து மிகவும் கவனமாகத் தேடுகிறாள். அவள் மறைத்து வைத்திருந்த