பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J2 பூர்ணசந்திரோதயம்-1 நூலேணி, அந்த அமர்க்களத்தில் எங்கேயோ காணாமல் போய்விட்டது; அதைத் தேடி எடுத்து வெந்நீர் அண்டாவிற்குள் போட்டுவிட்டால், அதற்குள்ளிருக்கும் கள்ளப் புருஷர், சில நாழிகை நேரம் கழித்து, மேன் மாடத்திலிருந்து வேலைக்காரர் களுக்குத் தெரியாமல் தப்பிப்போக அது உபயோகப்படு மென்பது அவளது கருத்து; அதுவுமின்றி, அந்த நூலேணி அவ்விடத்திலேயே கிடந்து, தாங்கள் புறப்பட்டுப்போனபிறகு, பணி மக்களிடம் அகப்படுமானால், அவர்கள் தனது கற்பைப் பற்றிச் சந்தேகங் கொண்டு தன்னை இழிவாக மதிப்பார் களென்றும், அந்த விஷயத்தைத் தனது கணவரிடத்தில் தெரிவித்து விடுவார்களென்றும், அந்த யெளவன ஸ்திரீ நினைத்து அச்சங்கொண்டு, அதனால் தூண்டப்பட்டவளாய், விடாமுயற்சியோடு அந்த நூலேணியை அவ்வாறு தேடிக் கொண்டிருந்தாள். அதுகாறும் மிகவும் சாந்தமாகப் பொறுத்துக் கொண்டிருந்த அந்தப் புருஷர் நிரம்பவும் ஆத்திரமடைந்து, 'அடீ என்ன இது? நாடகமா ஆடுகிறாய்? நீ புறப்படுவதற்குள் பொழுது விடிந்து போகும்போல இருக்கிறதே! எல்லாச் சாமான்களையும் தான் கொண்டு போய் விட்டார்களே! இன்னம் எதைத் தேடுகிறாய்?" என்று மிகவும் கோபமாகக் கேட்க,அவள் அந்தக் கேள்வியைச் சிறிது நேரத்திற்கு முன்னரே எதிர்பார்த்து, தனது கையிலிருந்த ஒரு மோதிரத்தைக் கழற்றி வெந்நீரண்டாவின் பக்கத்தில் போட்டிருந்தவளாதலால், அவர் கேட்டவுடனே கொஞ்சமும் யோசனை செய்யாமல், இரண்டு நாளைக்கு முன் நீங்கள் வாங்கிக்கொடுத்த பச்சைக்கல் மோதிரம் எங்கேயோ விழுந்து விட்டது. அதைத்தான் தேடுகிறேன்' என்று சடேரென்று மறுமொழி கூறினாள். அதைக் கேட்ட புருஷர், "மோதிரம் கிடந்தால் கிடக்கட்டும். அதை வேலைக்காரர்கள் எடுத்து வைப்பார்கள். அதை விட உயர்வான இன்னொரு மோதிரம் மைசூரில் வாங்கித் தருகிறேன். புறப்பட்டு வா; நேரமாகிறது" என்று அழுத்தமாக அதட்டிக் கூறினார்.