பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37 அறவே பிடுங்கி எடுத்துவிட்டு, கட்டுப்பற்களை வைத்து வாயை நிறைத்துக்கொண்டிருந்தார். நரைத்து வெள்ளிக் கம்பிகள்போல இருந்ததலைமயிர் மீசைமயிர் முதலியவைகளிற்கு சாயம் ஏற்றி அவைகளைக் கறுப்பு மயிராக்கிக்கொண்டிருந்தார்; அவரது உடம்பு குட்டையாகவும் கட்டுத்தளராததாகவும் இருந்த தாகையால், அவரது மீசை நரைத்திருந்தது ஆனாலும் ஆசை மாத்திரம் நரைக்காமல், அப்போதும் யெளவன பருவத்திலேயே இருந்தது. அவரைப் போல இளவரசரும் நாற்பத்தைந்து வயதடைந்தவராக இருந்தார். அவரது தேகம் வாதசரீரமாகப் பொதிர்ந்து சிவந்திருந்ததன்றி, அவரது மூக்கு முழிகள் புருவ வில்கள் வாய் கன்னங்கள் முதலிய யாவும் அதிக செழிப்பாகவும் எடுப்பாகவும் இருந்தன. அவரது முகம் யெளவன பருவத்தில் மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் இருந்ததானாலும் வயதேற ஏற, அதிக சுகத்தினாலும் புஷ்டியான போஜனத்தி னாலும் எல்லா அங்கங்களும் பூதாகாரமாக பெருத்திருந்தன. ஆகவே, அவர் பெருத்த அரசரது புதல்வரென்ற பயத்தினாலும், மரியாதையினாலும் செல்வாக்கினாலும் அவரிடத்தில் ஸ்திரீகள் அணுகி அவரைக்கண்டு தாம் மிகவும் மோகித்துப் போனதாகப் பாசாங்கு செய்தனரே யன்றி, உண்மையில் அவர்கள் தம் மனதிற்குள்ளாக அருவருப்பும் அச்சமுமே கொண்டவராக இருந்தனர். மேலே குறிப்பிக்கப்பட்ட விருந்தில் கூடியிருந்த அறுவரில், மேலே விவரிக்கப்பட்ட இருவர் தவிர, மற்ற நால்வர்களுள் கலியாணபுரம் மிட்டாதார் ஒருவர். அவரது வயது முப்பது! அவர் மிகுந்த அழகு வாய்ந்த தேகமும் வசீகரமான வதனமும் பெற்றவர். அவருக்கு மிகவும் அழகான யெளவனமனையாட்டி ஒருத்தி இருந்தாளானாலும், அவர் அவளிடத்தில் அதிக வெறுப்பை அடைந்தவராய், இக்கரைக்கு அக்கரை பச்சையென்ற கொள்கைக்கு இணங்க, அயலார் மனைவிகளே