பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூர்ணசந்திரோதயம்-1 அழகானவர்களென நினைத்து, எவ்வித துன்மார்க்கத்திலும் இறங்கப் பின்வாங்காதவராக இருந்தார். இன்னொரு விருந்தினர் சூரக்கோட்டைப் பாளையக்காரர். அவருக்கும் வயது முப்பது. அவர் சதைப்பிடிப்பில்லாத மெல்லிய உயரமான சரீரத்தைக் கொண்டவர். அவருக்குப் பூர்விகமான சொத்து எதுவுமில்லை. ஆகையால், அவர் பாளையக்காரர் என்ற புராதன கெளரதையை மாத்திரம் விடாமல் வகித்துக்கொண்டு லக்ஷப் பிரபுவான ஒரு வியாபாரியின் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டார். ஆனால், பாளையக்காரர் வமிசத்தைச் சேர்ந்த நாம், வியாபாரியின் பெண்ணை மதிப்பதா என்ற மமதையினால், அந்தப்பெண்ணை வெறுத்து இம்சித்து விலக்கி இப்படிப்பட்ட சந்தோஷப் புருஷர்களோடு சேர்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டு வந்தனர். அவர் சேனைகளை நடத்துவதில் கைதேர்ந்தவராதலால், பல சண்டைகளுக்குப் போய் அவர் கீர்த்தியும் நற்பெயரும் பெற்றவராக இருந்தார். அவரிடத்தில் முரட்டுத்தனமும் சொற்பம் இருந்துவந்தது. இன்னொரு விருந்தினர் சேரங்குளம் இனாம் தார். அவரது வயது இருபத்தாறு அல்லது இருபத்தேழிற்கு மேலிராது. அவருக்கு ஏராளமான மானியநிலங்களின் வருமானம் வந்துகொண்டிருந்ததனாலும், அவற்றின்பொருட்டு அவர் அரசனுக்கு ஒரு காசுகூடக் கிஸ்தி செலுத்தாதவராதலால், அவர் அவ்வளவு பணத்தையும் பலவகையில் விரயம் செய்து கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு அழகும் வசீகரமும் பொருந்தியவராக இருந்தார். ஆனாலும், இரவில் நெடுநேரம் கண்விழிப்பதாலும், மட்டுக்கு மிஞ்சிய சிற்றின்ப நாட்டத்தினாலும், அவர் இளைத்து இரத்தம் செத்து வெளுத்து வியாதியஸ்தர் போலக் காணப்பட்டார். அவர் தமது ஆயுட்காலம் முழுதும் கலியாணம் செய்துகொள்ளாமல் பிரம்மசாரியாக இருந்துவிடுவதே உசிதமென்று நினைத்து அவ்வாறே இருந்து வருபவர்.