பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் S9 மற்றொரு விருந்தினர் சாமளராவ் என்ற ஒரு யெளவன புருஷர். அவருக்குச் சுமார் இருபது வயதிருக்கலாம்; அவர் மிகவும் அழகான தேகத்தையுடையவர். அந்த ஊரில் அம்மணிபாய் என்று ஒர் அழகிய ஸ்திரீஇருந்து வந்தாள். அவள் ஆரம்பத்தில் பரம ஏழையாக இருந்தவள். அவளது அற்புதமான அழகைக்கண்டு இளவரசர் அவளிடத்தில் சிலகாலம் நட்டாக இருந்து அவளை லக்ஷாதிபதி யாக்கிவிட்டாரென்று வதந்தி கூறுகிறது. ஆனால் அவளுக்கு இப்போது முப்பத்தைந்து வயதிற்கு மேலாவதால் இளவரசர் அவளுக்கு ஒய்வு கொடுத்து விட்டதாகவும் வதந்தி கூறுகிறது. மேலே குறிக்கப்பட்ட சாமளராவ் என்பவர் மேற்படி அம் மணியாயின் அண்ணன் மகனென்று அவர்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆனால், அவர் அம்மணிபாயின் சொந்தப்பிள்ளையென்று சில ஜனங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள். அந்தசாமளராவிடத்தில் இளவரசருக்கு அத்தியந்த பிரியமிருந்து வந்ததாகையால், இளவரசர் விருந்திற்குப் போகுமிடத்திலெல்லாம் சாமளராவை யும் காணலாம். அவருக்கு ஜெமீந்தார் முதலிய எவ்விதப் பட்டமும் இல்லாவிட்டாலும், அவர் இளவரசரிடத்தில் அந்தரங்க நட்பினராக இருப்பது பற்றி, மற்ற எல்லோரும் அவரையும் ஒரு பெரிய மனிதராக மதித்து வந்தனர். அவர் சங்கீதத்தில் நல்ல நிபுணராதலால், இளவரசர் குதுகலமாக இருக்கும் வேளைகளில், சாமளராவ் சுகமாகப்பாடி இளவரசரை மகிழ்விப்பார். ஆகவே, இளவரசர் அவரை அன்பாக நடத்தி அவருக்கு அடிக்கடி பெருத்த பணத்தொகைகளைச் சன்மானமாகக் கொடுத்துத் தமது அபிமான புத்திரன்போலப் பாதுகாத்து வந்தார். இவ்வாறு விவரிக்கப்பட்ட அறுவரும் ஒன்றுகூடி வடக்கு ராஜ வீதியிலுள்ள மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகைக்குள் சிங்காரமான ஒரு மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டு விருந்துண்டபிறகு அழகான இரண்டு தாசிகள் நாலைந்து நாழிகை நேரம் வரையில் மனதைக் கவரும்படி நடனம்