பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41 முன்னால் நான் பிறந்தவன்; அது முதல் நானும் புதிய புதிய பெண் பிள்ளைகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால், சென்ற சில வருஷ காலமாகக் கிடைப்ப தெல்லாம் அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை. கலியாணபுரம் மிட்டாதார்:- ஆகா நன்றாகச் சொல்லுகிறீர்கள்! இந்த உலகமே எப்போதும் புதுமை புதுமையாக மாறிக் கொண்டே இருக்கிற சுபாவமுள்ளது அல்லவா இந்த நிமிஷத்தில் இதே ஊருக்குள் எத்தனை ஊர்வசி, ரம்பை, திலோத்தமைகள் நம்முடைய கண்ணில் படாமல் மறைந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அங்கங்கு போய்ப் பழகுகிறவர்களுக்குத்தான் புதிய உருப்படிகளெல்லாம் தென்படும்; நீங்கள் உங்களுடைய அரண்மனைக்குள்ளாகவே இருந்தால் எப்படித் தெரியும்? இதோ எனக்குத் தெரிந்து சில காலமாக நான் ஒரு புதிய பெண்ணைப் பார்த்தேன். ஆகா! நடசத்திரச் சுடரென்றாலும் அவளுக்குத் தான் தகும்! சேரங் குளம் இனாம் தார்:- ஆம், ஆம். நீர் யாரைக் குறிக்கிறீரென்பதும் எனக்குத் தெரியும். இன்றையதினம் காலையில் கூட அவள் ஸ்ாரட்டு வண்டியில் உட்கார்ந்து கொண்டு வெண்ணாற்றங்கரைக்கு வந்திருந்தாள். சூர. பாளையக்காரர்:- வம் புலாம் சோலைக்குள் அவள் ஒருநாள் வண்டியில் வந்திருந்தபோது, ஒருவர் அவளை எனக்குக் காட்டினார். ஆகா! அவள் உண்மையிலேயே கந்தருவ ஸ்திரீதான்! சேர. இனாம்தார்:- நானும் இதுவரையில் எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவளைப்போல ஜெகத்ஜோதியாக டால்வீசும் பெண்கள் இந்தப் பூலோகத்தில் இருப்பார்களென்று நான் நம்பவே இல்லை. அவள் பெருத்த மண்டலேசுவரனுடைய அந்தப்புரங்களில் நவரத்ன மயமான மணி மண்டபத்தில் கொலுவீற்றிருக்கத் தகுந்த அவ்வளவு அபாரமான ஜ்வலிப்பைக் கொண்டவளாக இருக்கிறாள். -