பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 43 பேசுகிறார்கள். ஆனால் அவள் எந்த மனிதரிடத்திலும் பேசுகிறதே இல்லையாம். அவளுடைய வரலாறெல்லாம் அவளுடன் இருக்கும் வேலைக்காரரிடத்திலிருந்து மிகுந்த பிரயாசையின்மேல் அறிந்துகொள்ளப்பட்டதுதானாம். சூர. பாளையக்காரர்:- இந்த ஊரிலுள்ள ஒரு ஜெமீந்தார் அவளுக்கு ஒரு கடிம் எழுதினாராம். அவர் அதற்குள் ஒரு லக்ஷம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு வைர ஜடை பில்லையை வைத்து அனுப்பினாராம். அவள் அந்த நகையைப் பார்த்து விட்டு அதை யும் கடிதத்தையும் அப்படியே திருப்பி அனுப்பி விட்டாளாம். இருந்தாலும் பெண்டுகளுக்கு அப்படிப்பட்ட மனோதிடம் இருக்க வேண்டும். இளவரசர்:- (மகிழ்ச்சியினால் மலர்ந்த முகத்தினராய்) ஏதேது! நீங்களெல் லோரும் சொல் வதைப் பார்த்தால் என்னுடைய நாக்கில் இப்போதே தேன் ஊறு கிறதே! அவளுடைய பெயர் பூர்ணசந்திரோதயமா அடடா எவ்வளவு சொகு ஸ்ான பெயர் அந்தப் பெயரை வாயில் வைத்துப் பத்துதரம் ஜெபித்தால் கூட, உடனே உடம்பு முழுவதும் ஆனந்தபரவசம் அடையும் போல இருக்கிறதே! நீங்கள் எல்லோரும் மகா வஞ்சகர்கள். இந்த ஊர் முழுவதும் தெரிந்திருக்கும் இந்த விஷயத்தை இதுவரையில் என்னிடத்தில் சொல்லாமல் தானே மறைத்து வைத்திருக்கி lர்கள்! நான் ஒருவேளை போட்டிபோட ஆரம்பித்தால் உங்க ளுக்கெல்லாம் கிடைக்காமல் போய்விடுமே என்ற பயம் போல் இருக்கிறது. - t சாமளராஷ் :- அதெல்லாம் இல்லை. நான் நன்றாக விசாரித்துப் பார்த்துவிட்டேன். அவள் எப்பேர்ப்பட்ட கோடீசுவரனாக இருந்தாலும், கலியாணம் செய்துகொள்ள வாவது வைப்பாக இருக்கவாவது இணங்கவில்லையாம். அவளுடைய நோக்கம் ஒருவேளை பெருத்த மகாராஜா, அல்லது இளவரசர் அப்படிப்பட்ட இடங்களாக இருந்தால்