பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பூர்ணசந்திரோதயம்-1 மேன்மேலும் முயற்சி செய்யலாமென்ற ஒரு யுக்தி யாருக்காவது தோன்றும். இதனால் உங்களையெல்லாம் பொய்யர்களென்று நான் சொல்வதாக நினைக்கக்கூடாது. விஷயம் நிரம்ப மனசைக் கவரக் கூடியது. ஆகையால், முதலில் நானே இந்த விஷயத்தில் பொய் சொல்லுவேன்' என்றார். சூர. பாளையக்காரர். அந்த நிபந்தனை தான் நிரம்பவும் முக்கியமானது. இதில் எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. ஜெயிக்கிறவன் பூர்ணசந்திரோதயத்தை மாத்திரம் ஜெயிப்பது போதுமா? அவன் என்னைப்போல ஏழையாக இருந்தால், அவளுக்குச் செய்ய வேண்டிய செலவுகளுக்கெல்லாம் பணம் வேண்டாமா? ஆகையால், நாமெல்லோரும் தலைக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் போட்டு மொத்தம் சேரும் முப்பதினாயிரத்தையும், வெற்றி பெறுகிறவனுக்கு உடனே கொடுத்துவிட வேண்டுமென்று நினைக்கிறேன். இளவரசர்: பேஷ்! நல்ல முதல்தரமான யோசனை. அந்த நிபந்தனையையும் வைத்துக் கொள்வோம். நம்முடைய மருங்காபுரிக்கிழவர் பொக்கிஷதாரராக இருக்கட்டும். நாளைக்குப் பகல் 12மணிக்குள் எல்லோரும் தத்தம் பணத்தைக் கிழவரிடத்திற்கு அனுப்பிவிடவேண்டும். சாமளராவின் பணம் கொஞ்சம் இப்போது என் வசத்தில் இருக்கிறது. ஆகையால், அவனுக்காகவும் எனக்காகவும் நான் நாளையதினம் காலையில் பதினாயிரம் ரூபாய் அனுப்பி விடுகிறேன். என்றார். அதைக் கேட்ட சாமளராவ் தன்னிடத்தில் பணமில்லை யென்று கண்ட இளவரசர் தன்மீது மிகுந்த அன்பும் அபிமான மும் கொண்டு, தனது கெளரதைக்குக் குறைவு ஏற்படாதபடி பக்குவமாகப் பேசித் தனக்கும் பணம் அனுப்புவதாகச் சொன்னதையுணர்ந்து நன்றியறிதலின் பெருக்கும் மன வெழுச்சியும் கொண்டவனாய், மிகுந்த பக்தி விநயத்தோடு இளவரசரைப் பார்த்தான்.