பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பூர்ணசந்திரோதயம்-1 அந்த அற்புதமான மாளிகையின் முன்புறத்தில், ரதிதேவியும், மன்மதனும் வஸந்த காலத்தில் களிகொண்டு உலாவும் சிங்காரத் தோட்டம் போன்ற ஒரு சிறிய உத்யானவனம் இருந்தது. அதற்குள், வெண்கலச் சிலைகளின் தலையிலிருந்து தாமரை மலர் போலவும், மல்லிகை மலர் போலவும், பளிங்கெனத் தெளிந்த தண்ணிரைச் சொரியும் ஊற்றுகளும், வாழை, கமுகு, தென்னை, மா, பலா, மாதுளை, கமலாமுதலிய கனிகளைக் குலைகுலையாகத் தொங்கவிட்டிருந்த பழ மரங்களும், சம்பங்கி, ரோஜா, ஜாதி, மல்லிகை, மனோ ரஞ்சிதம், பன்னீர் முதலிய நறுமலர்களைச் சொரிந்து அந்த வீதி முழுதும் பரிமள கந்தத்தையும் மகரந்தத்தையும் அள்ளி பூசிய பூச்செடிகளும் அழகிய கொடிகள் ஏற்றிவிடப்பட்டிருந்த வளைவு பந்தல்களும் நிறைந்து, அந்த அதியற்புத மனோகரச் சோலை, அந்த ராஜபாட்டையின் வழியாகச் செல்வோரது மனதைக் கொள்ளைகொண்டு, ஐம்புலன்களும் பிரம்மாநந்த சாகரத்தில் தோய்ந்து பரவசமடையச் செய்யத்தகுந்ததாக இருந்தது. அப்படிப்பட்ட மேம்பாடு வாய்ந்த ரமணியமான பூங்காவிற்கு மேலிருந்த சிங்கார உப்பரிக்கையில் பவழப்பந்தலின் கீழ்ப் பஞ்சவர்ணக் கிளியை வைத்துக் கொஞ்சிக் குலாவியவண்ணம் பூர்ணசந்திரோதயம் சொகுசாக நின்ற காட்சி திவ்ய தேஜோமயமான தெய்வலோகக் காட்சியாக இருந்தது. அந்தப் பெண்பாவையின் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பதிற்கு மேல் இராது எனத் துணிந்து சொல்லலாம். அவளது சரீரம் மெருகு கொடுக்கப்பட்ட பத்தரைமாற்றுத் தங்கம்போலக் காணப்பட்டு, இயற்கையான மினுமினுப்பும் ஜ்வலிப்பும் நிரம்பியதாக இருந்தது. அவளது அழகான பெயருக் கிணங்க அந்த மின்னாளின் முகம் பூர்ணசந்திரபிம்பம்போலவே காணப்பட்டு அமிர்தத்தையும், குளிர்ச்சியையும் கிரணங்களாக