பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 51 எங்கும் பரப்பினதானாலும், அந்த முகம் முழுதும் வட்டவடிவமாக இல்லாமல் அகண்டாகாரமாக சொற் பம் நீட்டுப் போக்காகவும், எவ்விதமான குற்றம் குறைபாடு கூறுவதற்கும் இடமில்லாததான மகா அபாரமான சிருஷ்டியாகவும் இருந்ததன்றி, அவளது சிரத்தில் அடர்ந்து கறுத்து நெளிந்து சுருண்டு நீண்டு கற்றையாகச் சென்று கணைக்காலைத் தொட்டுக் கொண்டிருந்த அளகபாரமானது பின்னப்பட்டு அரைச்சாண்அகலத்தில் தொங்கிக் கொண்டிருந்த பின்புறக் காட்சி, இராகு வென்னும் கருநாகம், பூர்ண சந்திரனாகிய அவளது சுந்தரவதனத்தை மறைக்க மாட்டாமல் பயந்து பின்புறத்தில் ஒளிந்து நிற்கிறதோவென நினைக்கத் தக்கதாக இருந்தது. அவ்வாறு தொங்கிய விசாலமானஜடையில் நட்சத்திரக் கூட்டங்கள் போல வைரக் கற்கள் டால் வீசிய ஜடை பில்லைகள் ஆங்காங்கு காணப்பட்டு அவளது பின்னழகைக் காண்போர் யாவரும், அப்படியே மயங்கித் தயங்கி மோகலாகிரியின் வயத்தராய்ச் சொக்கிப்போய் நிலைகலங்கி நிற்கச்செய்வதாக இருந்தன. கமான்கள் வளைத்துவிடப்பட்டது போல இயற்கையாகவே வளைந்து வளைந்து சென்றிருந்த கூந்தலும், அதன் கீழ் தந்தத்தகடுபோலக் காணப்பட்ட நெற்றியும், அந்த வடிவழகியின் முகமான பூர்ண சந்திரன் கொலுவீற்றிருக்குமாறு கட்டப்பட்ட அஸ்மானகிரிப் பந்தல் போல இருந்தன. கருத்தடர்ந்து காமன்கை வில்போல உயிரைக் கொள்ளை கொண்ட புருவ வில்களும்,கடல்போல ஆழ்ந்து பரந்த கறுப்பு விழிகளும், சிவந்து கனிந்து தேன் பிலிற்றும் அதரங்களும், முல்லையரும் பின் பத்திகள் போன்ற மாசுமறுவற்ற பல்வரிசைகளும், கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அன்னப் பறவையின் வெண்ணிறக் கழுத்தும், வனப்பும் நிமிர்வும் நிறைவும் பொருந்திய ஏந்தெழில் மார்பும், உண்டோ இல்லையோ என ஐயுறத்தக்க இடையும், நவரத்ன சிங்கார ரதத்தின் அடிப் பாகம் போன்ற அரையும், கரனை கரணையாகவும் கட்டுமஸ்தாகவும் இருந்த கைகால்களும்