பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பூர்ணசந்திரோதயம்-1 பெற்றவளாய், அந்த அதிருப மோகனாங்கி அப்போதே தெய்வலோகத்திலிருந்து பூஞ்சோலையோடு கீழே இறங்கிய அப்ஸ்ர ஸ்திரீபோலக் காணப்பட்டாள். இடையில் அணியப் பெற்றிருந்த வைரக்கற்கள் நிறைந்ததங்க ஒட்டியாணம், அவளது தேகத்தின் இயற்கை அமைப்பு எவ்வளவு சொகுலாக இருந்தது என்பதை நன்றாக எடுத்து வெளிப்படுத்தும் சாதனமாக அமைந்திருந்தது. அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் வைரக்கற்களும், நவரத்னங்களும், ஜரிகையும், பட்டுமே மயமாக நிறைந்த நீலம், பச்சை, சிவப்பு, ஊதா, வெளுப்பு முதலிய பல வர்ணங்களைக் காட்டி, அவளும் அந்த வனத்தில் இயற்கையில் பூத்த எழில் மலரோ, அல்லது, அவ்விடத்தில் காய்த்துப் பழுத்துக் கனிந்த தீங்கனியோ, அல்லது, புதுமையாகப் படைக்கப்பட்ட கொஞ்சுங் கிள்ளையோவென, வாக்காலும், மனத்தாலும் உள்ளபடி அளப்பரிய மனமோகன வசீகர சிருஷ்டியாக இருந்தாள். அவ்வாறு ஜெகன்மோகன விலாசத்தின் மேன்மாடத்தில் காலை ஒன்பது மணிக்கே உதயமாகிக்காட்சிக் கொடுத்துக் காண்போர் மனத்தைப் பரவசப் படுத்தி மின்னற் கொடிபோல நின்ற பூர்ணசந்திரோதயம் என்ற பெண்மணியை அந்த ராஜவீதியில் சென்ற கிழவர் முதல் குழந்தைகள் ஈறாக உள்ள சலக ஜனங்களும் பார்த்து, மதிமயங்கி, நிலைகலங்கி, பிரமித்து ஸ்தம்பித்து அப்படியே சிறிதுநேரம் சொக்கிப் போய் நின்று, அவள் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தினாலோ, அல்லது, பிறர் தம்மை கவனிப்பார்களோ என்ற நினைவினாலோ தூண்டப்பட்ட வர்களாய், அவ்விடத்தை விட்டு நடந்து நெடுந்துாரம் போய் மறையும் வரையில் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர். அவ்வாறு எல்லோர் மனதையும் காந்தம்போல ஒரு நொடியில் கவர்ந்தவளாய் நின்றிருந்த அந்த வாமக்களஞ்சியம், ராஜபாட்டையில் சென்ற எவரையும் கவனிக்காமல் கிளிகளோடு விளையாடிக்கொண்டிருப்பவள் போலக் காணப்பட்டாளானாலும், அவளது கடைக்கண் பார்வை