பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பூர்ணசந்திரோதயம்-1 இந்தக் கிளியைப் பிடித்துக்கொணர்ந்த எனக்கு இன்னும் கொஞ்ச தூரம் நடந்துபோய் இதை இதன் நாயகியிடத்தில் சேர்ப்பது ஒரு பிரயாசையாகாது. நானே நேரில் போகிறேன். என்று கூறினார். அதைக்கேட்ட காவலன் அதற்குமேல் தான் ஆட்சேபிப்பது தவறென நினைத்து, அவருக்கு வழிகாட்டி முன்சென்று அவரை அழைத்துக் கொண்டு மேன்மாடத்திற்கு நடந்தான். அவனைத் தொடர்ந்து பின்னால் சென்ற மகா அதிர்ஷ்டசாலியான அந்த யெளவன புருஷர், ஏதோ கனவில் இன்பக்கடலில் நீந்திப் பறந்து மேலே செல்வபர்போல மெய்மறந்து ஆனந்தபரவசம் அடைந்தவராய் மேலே ஏறிச் சென்றார். அடுத்த நிமிஷத்தில் அவர் தமது மதியை மயக்கி மனதை இளக்கி உயிரைக் கொள்ளைகொண்டு அறிவை யழித்துத் தம்மைப் பித்தனைப் போலாக்கிய காமரூபிணியான அந்த மடவன்னத்தின் முன்னர் போய் நின்றார். அவளது அற்புத ஜோதியைக் காணமாட்டாமல், அவரது கண்கள் கூசின. அவர் நாணிக் கோணித் தயங்கிப் புன்னகை செய்தவண்ணம், அவளுக்கருகில் சென்று பஞ்சவர்ணக் கிளியை நீட்ட, அவள் மிகுந்த நாணமும், மடமும், அச்சமும், பயிர்ப்பும் தோற்றுவித்தவளாய், அதை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தனது முகத்தைக் கீழே கவிழ்த்த வண்ணம், 'தாங்கள் யாரோ என்னவோ தெரியவில்லை. வழியோடு போகிற தங்களுக்கு இந்தப் பொல்லாத கிளி இவ்வளவு தூரம் பிரயாசை கொடுத்துவிட்டது. மன்னிக்க வேண்டும். தாங்கள் யாரென்பதைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்' என்று சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போல மிகவும் மாதுரியமாகப் பேச அதைக் கேட்ட அந்த யெளவன புருஷர் புன்னகை செய்து, 'இது ஒரு பெரிய பிரயாசையா? இதற்கு மன்னிப்புகூடக் கேட்க வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இந்த ஊருக்கு வடக்கில் கலியாணபுரமென்று ஒரு மிட்டா சமஸ்தானம் இருக்கிறது. அதற்கு நான்தான் மிட்டாதார்; ஒரு வேலையாக