பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பூர்ணசந்திரோதயம்-1 உனக்குத் துஷ்டக்கிளியாகத் தோன்றினாலும், நான் இதை நற் குணமுள்ள கிளியென்றே நினைக்கிறேன். தெருவோடு போன என்னை இந்தக் கிளி பார்த்தவுடனே, நான் உன்னோடு பேசி, உன்னுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு யோக்கியதையுடையவனென்று கண்டு, உடனே பறந்துவந்து, என்னை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறதே, அப்படிப்பட்ட மகா உபகாரியான கிளியை நீ தூவிப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீ என்னுடைய மன்னிப்பைக் கேட்பதைவிட அந்தக் கிளியின்மேல் கோபங்கொள்ளாமல் நீ அதை மன்னிக்க வேண்டுமென்று நான் உன்னிடத்தில் கேட்டுக்கொள்வதே பொருத்தமாக இருக்கும். நான் உன்னிடத்தில் பேசிப் பழகும்படியான இன்பமும், பெருமையும் எனக்குண்டாக்கி வைத்த அந்தக் கிளியை நான் என் உயிருள்ள வரையில் மறக்கமாட்டேன்' என்று வேடிக்கையாகவும் குதுகலமாகவும் கூறினார். அவர் சொன்ன வார்த்தைகளின் உள் கருத்தைக் கவனியாதவள் போலக் காட்டிக்கொண்ட பூர்ண சந்திரோதயம் கூண்டில் விடப்பட்ட பஞ்சவர்ணக் கிளியண்டை போய்நின்று மிகவும் செல்லமாகப் பேசி அதைக் கண்டிக்கத் தொடங்கி, 'ஒகோ! உனக்கு அவ்வளவு கொழுப்பா மகாராஜாக்கள் எல்லாரும் இந்தக் கையைத் தொடுவதற்கு மன்றாடித் தவம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட என்னுடைய கையின்மேல் நான் உன்னை உட்காரவைத்துக் கொண்டு தடவிக் கொடுத்துக் கொஞ்சுகிறேன். நீ அதைவிட்டுப் போய் முள்கள் நிறைந்த வேலியின்மேல் உட்கார்ந்து கொள்ளுகிறாயா? உன்மேல் குற்றமில்லை. காலம் அப்படிக்கெட்டுப் போயிருக்கிறது; எவருக்கும் நல்லது கெட்டது தெரிகிறதில்லை. எப்போதும் நிழலிலேயே இருப்பவருக்கு அதன் அருமை தெரியாது. வெயிலைக் கண்டால் அங்கே போகவேண்டும்போல இருக்கும்; ஆனால், அங்கே போய்க் கொஞ்ச நேரமிருந்தால், அதன் பிறகு நிழலின் அருமை தெரியும். போக்கிரிக் கிளியே என்ன