பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 59 பார்க்கிறாய்? நான் உன்னை வைகிறேனென்பதைத் தெரிந்து கொண்டாயா? ஒகோ! ஜாக்கிரதை' இனி உன்னை வெளியில் எடுப்பேன் என்று நினைக்காதே. ஜெயிலிலேயே அடைபட்டுக்கிட அதுதான் உன் தலையெழுத்து; உன்னுடைய கூண்டின் வாசலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு வைக்கிறேன் என்று கிள்ளைமொழிவதுபோலக் கொஞ்சலாக அதனிடத்தில் பேசி, ஒரு கைக்குழந்தையை வாஞ்சையாகக் கண்டித்து அதனோடு விளையாடும் தாய் போல நயமாகக் கண்டித்த வண்ணம் குனிந்து அந்தக் கூண்டின் கதவை மூடி அதன் தாழ்ப்பாளை மாட்டி, ஒரு சிறிய குச்சியை எடுத்துச் சொருகினாள். - அவ்வாறு அந்த நளினசிங்காரி குனிந்து கிளியோடு கொஞ்சிய அற்புக் காட்சி, கலியாணபுரம் மிட்டாதாரது உயிரைக் கொள்ளைகொண்டு, அவரைக் கரை கடந்த வேதனையிலும் சஞ்சலத்திலும் ஆழ்த்தியது. அவள் அவ்வாறு குனிந்திருந்த போது, அவளது மார்பு, இடைதுடை முதலிய அங்கங்களின் அமைப்பும் எழிலும் மிகவும் எடுப்பாகத் தெரிந்தன. அந்த ரமணியமான ஸ்தலங்களில் தமது கவனத்தையெல்லாம் செலுத்தி மிகுந்த மனவெழுச்சி யும், ஆவேசமும் கொண்டவராக நின்ற கலியாணபுரம் மிட்டாதார், பூர்ணசந்திரோதயம்! இப்படிப்பட்ட அற்புதமான அழகு வாய்ந்த பஞ்சவர்ணக்கிளியை நீ கோபித்துக் கொள்வது எனக்குச் சகிக்கவில்லை. என் பொருட்டாகிலும் நீ அதன் மேல் வருத்தம் வைக்கக் கூடாது. இந்த இடத்தில் இத்தனை கிளிகளும், பட்சிகளும் இருப்பதைப் பார்த்தால் உனக்கு இந்த ஆகாய வாலிகளிடத்தில் நிரம்பவும் பிரியம் போலத் தோன்றுகிறது என்று நயமாகவும் நைவாகவும் பேசி வினவினார். அதைக் கேட்ட அந்த சுந்தராங்கி அப்போதும் அவரது முகத்தைப் பார்க்காமல் கிளியையே பார்த்த வண்ணம்,