பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பூர்ணசந்திரோதயம்-1 அதைக் கேட்ட கலியாணபுரம் மிட்டாதார் அவளது அற்புதமான வனப்பையும் ஜ்வலிப்பையும் கண்டு கரும்பு மொழிகளைக் கேட்டு இளகி உருகி மிகவும் நயமாகவும் வாத்சல்யத்தோடும் அவளைக் கபடமாக உற்று நோக்கி, "அப்படியானால், நீ இந்தக் கிளிகளையெல்லாம் கொணர்ந்து இப்படி வைத்துக் காப்பாற்றுவதெல்லாம், ஈவிரக்கமில்லாமல் இவைகளை வதைக்கிறதென்றா அர்த்தம்!” என்று மிகவும் இளக்கமாக வினவினார். உடனே பூர்ணசந்திரோதயம், 'ஆம்; அப்படித்தான் அர்த்த மாகிறது. இருந்தாலும் இந்தப் பட்சிகளையெல்லாம் எடுத்துப் பறக்க விட்டுவிடமாத்திரம் என்மனம் இடங்கொடுக்கமாட்டே னென்கிறது.இவைகளை நான் பறக்க விட்டுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், இவைகள் வேறே யாரிடத்திலாவது அகப்பட்டுக்கொண்டால், அவர்கள் என்ன செய்வார்களோ? இவைகளைக் கறியாக்கித் தின்றாலும் தின்றுவிடுவார்கள். அப்படி மடிவதைவிட இந்தச் சிறைச்சாலையிலிருப்பதே மேலானதெனவும் ஒரு சமயத்தில் தோன்றுகிறது” என்றாள். அதைக் கேட்ட மிட்டாதார் கண்களைச் சிமிட்டிக்கொண்டு கபடமாகப் பேசத் தொடங்கி, "அப்படியானால் இந்தப் பஞ்ச வர்ணக் கிளியினிடத்தில் நான் மிகுந்த வெறுப்பைத்தான் கொள்ள வேண்டும்" என்றார். . - பூர்ணசந்திரோதயம் வியப்புற்றவளாய், 'நான் அபாரமாக பிரியம் வைத்துள்ள இந்தக் கிளியைத் தாங்கள் வெறுக்கவேண்டிய காரணமென்ன?’ என்று நயமாக வினவினாள். உடனே கலியாணபுரம் மிட்டாதார் அவளது முகத்தைக் கபடப் பார்வையாகப் பார்த்துப் புன்னகை செய்தவண்ணம், "ஆம், வெறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால், அதனிடத்தில் அபாரமான வாத்சல்யத்தை வைத்திருக்கும் உன்னிடத்தில் அது நன்றிகெட்ட காரியம் செய்கிறதே. அதற்காகத்தான் அதை