பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பூர்ணசந்திரோதயம்-1 ஒரு நொடி நேரமாவது உன்னை மறந்தவனேயல்ல. உன்னுடைய வடிவம் புகைப்படம் பிடித்ததுபோல, என் மனசில் அப்போது முதல் உறுதியாகப் பதிந்துபோயிருப்பதால், பகலெல்லாம் அதுவே தியானமாகச் செய்து இரவெல்லாம் அதுவே கனவாகக் கண்டு நான் நெருப்பின் மேல் விழுந்த புழுப்போலத்தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலைமுதல் நடு இரவு வரையில் இந்த ராஜவீதியிலேயே நான் அலைந்தலைந்து நீ எப்போது உப்பரிக்கைக்கு வந்து எனக்குக் காட்சி கொடுப்பாயோ என்று பார்த்துப் பார்த்து என்னுடைய கண்கள் எப்படிப் பூத்துப் போப் விட்டன வென்பது உனக்குத் தெரியுமா? இந்த ஜாகைக்கு வந்து வெளியில் போன ஒவ்வொரு மனிதரோடும் நான் பழக்கம் செய்துகொண்டு, உன்னுடைய வரலாற்றை யெல்லாம் விசாரித்து அறிய எவ்வளவு பாடுபட்டிருப்பேன் தெரியுமா? உன்னிடத்தில் சிநேகம் செய்துவைக்கும்படி அவர்களை யெல்லாம் நான் எவ்வளவு தூரம் எத்தனைகாலம் கெஞ்சி மன்றாடி இருப்பேன் தெரியுமா? இந்த ஊரிலுள்ள ஒவ்வொருவரும் உன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். உன்னுடைய குணாதிசயங்களையெல்லாம் எடுத்தெடுத்துச் சொல்லுகிறார்கள். ஆனால், ஒருவராகிலும் உன்னிடத்தில் வந்து நெருங்கிப் பேசமாட்டாமல் அஞ்சிக் கழித்துக் கொள்ளுகிறார்கள். ஆகவே, நான் பைத்தியங் கொண்டவன் போல மாறி, ராப்பகல் உன் வீட்டு வாசலேகதியாகச்சுற்றி வந்து கொண்டிருந்தேன். கடைசியாக இன்றைய தினம், நான் வழக்கம்போல வந்து வேலியண்டை மறைந்து நின்றபோது, நீ தற்செயலாக எனக்குக் காட்சி கொடுத்தாய். உன்னை நான் ஒரு தெய்வமாக மதித்து அப்படியே ஸ்தம்பித்து நின்று உன்னை என்னுடைய இருதயகமலத்தில் வைத்துப் பூஜை செய்தவனாய், ஈசுவரனை நோக்கித் தியானம் செய்து என் மனசைக் கொள்ளைகொண்ட இந்த ஸ்திரீ ரத்னத்தோடு பேச, ஒரு மார்க்கம் காண்பிப்பது உனக்கு அரிதா என்று நான்