பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 71. கடவுளை நினைத்து வருந்தி ஸ்தோத்திரம் செய்திருந்த காலத்தில், கருணை வள்ளலான கடவுள் பஞ்சவர்ணக் கிளியின் மூலமாக உடனே நம் இருவருக்கும் பழக்கம் செய்து வைத்தார். நான் எண்ணியபடி பஞ்சவர்ணக் கிளி என்னிடத்தில் வந்ததை நான் ஒரு நல்ல சகுனமாக மதித்து மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக இங்கே வந்திருக்கிறேன்' என்று கூறிச் சிறிது நிறுத்தினார். உடனே பூர்ணசந்திரோதயம் மிகுந்த to Lp Gö»g, கொண்டவளாய்க் கொடுரமானபார்வையாக விழித்து அவரைப் பார்த்து 'ஓகோ அப்படியா சங்கதி! பசுவின் தோலுக்குள் புலி மறைந்திருக்கிறதோ இப்படிப்பட்ட கருத்தோடு தாங்கள் வந்து அலைந்துகொண்டிருக்கிறீர்களென்பதாவது, கொஞ்ச நேரத்துக் குமுன் வேலியண்டை வந்து ஒளிந்து கொண்டி ருந்ததாவது எனக்குத் தெரிந்திருந்தால், நான் இந்த மெத்தையின் முன்பக்கத்துக்கே வந்திருக்கமாட்டேனே. அடாடா இது நல்ல கூத்தாக இருக்கிறதே! அது இருக்கட்டும். தாங்கள் என்னைக் கண்டவுடனே ஏதோ மதிமயங்கிப் போய் அவஸ்தைப்படுவதாகச் சொல்லுகிறீர்களே முதலில் நான் யார் என்பதைத் தாங்கள் தெரிந்து கொண்டீர்களா?' என்றாள். கலியாணபுரம் மிட்டாதார், "ஓ! தெரிந்து கொண்டேன். நீ தார் வார் தேசத்து மகாராஜாவின் அபிமான புத்திரி என்பதையும், உனக்கு இன்னம் கலியாணமாகவில்லை என்பதையும் நான் சந்தேகமறத் தெரிந்து கொண்டேன்' என்று மிகவும் இனிமையாகக் கூறினார். அதைக் கேட்ட அந்தப் பேடன்னம் மிகவும் புரளியாகப் பேசத் தொடங்கி, "ஓ! அப்படியா! அவ்வளவுதூரம் தெரிந்துகொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பரவாயில்லை. நான் யாரென்பதைத் தாங்கள் சரியாகவே தெரிந்துகொண்டிருக்கிறீர்கள். அதிருக்கட்டும். தாங்கள் சகல மரியாதையும் தெரிந்த பெரிய மனிதர். நான் ஒரு மகாராஜாவின் மகளென்று தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்.