பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73 பறக்கிறது. மனம் பொங்கிப் பதறுகிறது. காமன் கணைகள் ஒன்று பத்து நூறாயிரம் கோடியாக வந்து அவரது மார்பில் தைத்து ஊடுருவிப் பாய்ந்து அவரது நெஞ்சை சல்லடைக் கண்ணாகத் துளைக் கின்றன. அந்த நிலைமையில் அவர் முற்றிலும் மெய்மறந்து ஆவேசம் கொண்டவராய், ஒரே பாய்ச்சலாக அவளுக்கெதிரில் பாய்ந்து, 'என் உயிரைக்கொள்ளை கொண்ட என் கண்மணியே எவ்வளவோ பகீரதப் பிரயத்தனம் செய்து நான் இங்கே வந்து, புதையலெடுத்த தனம் போல உன்னோடு பேசும் பாக்கியத்தைப் பெற்றபின் நான் அபஜெய மடைந்து வெளியில் போய் இனி ஒரு நொடிகூட உயிர் சுமந்திருக்க மாட்டேன். குற்றுயிரும் குலை உயிருமாக வைத்து என் ஆயுசுகாலம் முடிய என்னை நீ சித்திரவதைக்கு ஆளாக்குவதை விட உன் கையாலேயே நீ என்னைக் கொன்று போட்டுவிடு. அந்தக் காரியம் செய்ய உன் மனம் துணியாவிட்டால் நானே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உன் பாதத்தடியில் விழுந்து இறந்து போகிறேன்' என்று கூறி மிகவும் உருக்கமாகப் பேசிக் கண்ணிர் விடுத்துக் கலங்கி யழுது நைந்திளகி அவளுக்கெதிரில் உட்கார்ந்து, குனிந்து அவளது அழகுவழிந்த பொற்பாத கமலங்களைத் தொட்டுத் தடவி மாறி மாறித் தனது கண்களில் ஒற்றிக்கொண்டார். 6-வது அதிகாரம் கூத்தாடி அன்னத்தம்மாள்- கட்டாரித்தேவன் தஞ்சைமா நகரத்திற்கு வடக்கிலுள்ள திருவையாறு என்ற ஸ்தலத்திற்குச் செல்லும் ராஜபாட்டையின் மீது சுமார் நான்கு மைல் தூரத்தில் அம்மன் பேட்டை என்ற ஒரு சிறிய ஊர் இருக்கிறது; நமது கதை நிகழ்ந்த காலத்தில் அந்த ஊரில் சுமார் இருநூறு வீடுகளுள்ள நான்கு வீதிகளும், அவற்றினிடையில் ஓர் அம்மன் கோயிலும் இருந்தன. அவற்றுள் சுமார் ஐம்பது வீடுகளில் மிராசுதார்களும், மிகுதியிருந்த பெரும்பாலான வீடுகளில் கூத்தாடிச்சிகள் என்று சொல்லப்