பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75 லக்ஷக்கணக்கில் பணமும், நிலங்களும், ஆடையாபரணங்களும் இருந்துவந்தன. அவளது வீட்டையெல்லோரும் பெரியவீடு என்று குறிப்பிடுவது வழக்கம். பெரிய வீட்டுக்காரியிடத்தில் மற்ற எல்லோரும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்து அவளது சொற்படி நடந்துவந்தனர். மற்றவர்களது வீடுகளில் சாமான்ய ஜெமீந்தார்களையும், மிராசுதார்களையும் காணலாமென்றால், பெரிய வீட்டு அன்னத்தம் மாளி னண்டையில் மகாராஜாக்கள், அல்லது அவர்களது மந்திரிமார்களை மாத்திரமே காணமுடியும். அம்மன்பேட்டை அன்னமென்றால் அரசர்களெல்லோரும் திக்கு நோக்கித் தெண்டனிடுவார்கள். நமது கதை நிகழ்ந்த காலத்தில் அந்த அன்னத்திற்கு வயது சுமார் முப்பத்தைந்து இருக்கலாம். அவள் அழகுவழிந்த சொகுசான மேனியும், ஒரு கண்ணாடியில் உலகையெல்லாம் மயக்கத்தக்க முக வசீகரமும், கந்தருவப் பெண்ணோவென யாவரும் கலங்கக் குயில் போலப் பாடி மயில்போல நடிக்கும் மகா அருமையான திறமையும், தனது வலையில் வீழ்ந்தோரிடத்தில் அமிர்தம் போல அதிமனோக்கியமாக ஒழுகி அவர்களது மனம் பரவசமடையச் செய்யும் ஸ்ரஸகுணமும் வாய்ந்தவளாக இருந்தாள். அவள் வள்ளியம்மை நாடகத்தில், வள்ளி வேஷம் போடுவதிலும், அரிச்சந்திர நாடகத்தில் சந்திரமதி வேஷம் போடுவதிலும் மகா கீர்த்தி வாய்ந்தவள். ஒர் இரவில் அந்த வேஷம் தரித்து நடிப்பதற்கு ஆயிரம் ரூபாய்க்குக் குறைந்த தொகையை அவள் பெறுவதில்லை. அந்தத் தொகையை வைத்துக் கொண்டு சில ஊரார் அவளை நாடகத்திற்கு அழைத்தாலும், சில சமயங்களில், அவள் தனக்குத் தேக அசெளக்கியமாயிருக்கிற தென்று சொல்லி அனுப்பி விடுவாள். அவளுக்கும், முன்னதிகாரங்களில் குறிக்கப்பட்ட தஞ்சை நகரத்தின் இளவரசருக்கும் நீண்டகாலமாக அந்தரங்க நட்பு இருந்து வந்தது. அவர் எப்போதாவது நினைத்துக் கொண்டால், இராக்காலத்தில் ஒரு பெட்டி வண்டியில் ரகசியமாகப்