பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77 அவர்களைக் கண்டு விரும்பாத மனிதரே இல்லையென்று சொல்லலாம். அப்படி இருந்தும், அன்னத்தம்மாள் தனது குடும்ப வழக்கத்தின்படி இராஜனது குடும் பத்துச் சிறுவர்களன்றி மற்ற எவரும் தனது புதல் வியரிடத்தில் நெருங்கிப் பேசக்கூடாதென்ற ஒரு நிர்ணயத்தில் அவர்களை வைத்துக் காத்து வந்தாள். அந்தப் பெண்களின் அபூர்வமான அழகைப்பற்றியும் குணாதிசயங்களைப் பற்றியும் கேள்வியுற்ற எத்தனையோ பெருத்த பெருத்த மனிதர்களெல்லாரும் அவர்களிடத்தில் நெருங்கி ஒரு வார்த்தை பேசுவதற்கு ஆயிரம் பதினாயிரம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி யனுப்பிப் பலவகையில் கண்ணிவைத்துப் பார்த்ததெல்லாம் பயனற்றுப்போயிற்று. அந்தக் கிள்ளைகளுள் ஒன்றேனும் அவர்களது வலையில் வீழாமல் உயர உயரப் பறந்து கொண்டிருந்தது. அம்மன்பேட்டை அன்னத்தம் மாளின் குடும்ப வரலாறு இவ்வாறு இருக்க, தஞ்சையில் தெற்கு ராஜ வீதியில் வந்திருந்த பூர்ணசந்திரோதயத்திற்கும் கலியாணபுரம் மிட்டா தாருக்கும் சந்திப்பு நேர்ந்த தினமாகிய திங்கட்கிழமை இரவு எட்டுமணி நேரமாயிற்று. அம்மன்பேட்டை அன்னத்தம் மாளது மாளிகையின் மேன்மாடத்திலிருந்த நிலைக்கண்ணாடி மண்டபம் மன்மதனது சயனக் கிரகம்போல மிகவும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அன்னத்தம்மாள் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் கொண்டவளாய் அங்குமிங்கும் சென்று ஏதேதோ ஏற்பாடு களையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். அவளது புதல் வியான பஞ்சவர்ணக் கிளிகள் ஐவரும் பட்டும், ஜரிகையும் நிறைந்த வெவ்வேறு நிறங்களைக் கொண்ட உயர்ந்த ஆடைகளையணிந்து, மையிட்டுப் பொட்டிட்டு ஜவ்வாதணிந்து, குழல் வனைந்து, நறுமலர் சூடி, கலியாணப் பந்தலில் அமர ஆயத்தமாக இருக்கும் புதுமணப் பெண்கள் போல அழகும் அலங்காரமும் நிரம்பப்பெற்றவராக