பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பூர்ணசந்திரோதயம்-1 இருந்தனர். அவர்கள் ஐவரும் ஒரே மாதிரியாக முடிமுதல் அடி வரையில் சகலவிதமான ஆபரணங்களையும் அணிந்திருந்தன ரானாலும் ஒருத்தி வைரம், ஒருத்தி பச்சை ஒருத்தி சிவப்பு, ஒருத்தி நீலம், இம்மாதிரியான வெவ்வேறு நிறங்களைக் கொண்ட ஜோடிப்பு நகைகளையே அணிந்திருந்தமையால், அவர்களது ஆடைகளின் வேறுபாடும், நகைகளின் வேறுபாடும் ஒன்றுகூடி அற்புதக்காட்சியாகத் தோன்றி, அது கந்தருவ லோகமோ, அல்லது, தெய்வ லோகமோ என்று சந்தேகிக்கும் படி செய்தன. அவ்வாறு அந்த மடமயிலார் காண்போர்மனதையும் கண்களையும் கொள்ளைகொள்ளும்படி அதிநேர்த்தியாகவும் ஆடம்பரமாகவும் சிங்காரித்துக் கொண்டு சதிர் நடத்த ஆயத்தமாக இருப்பவர்போல ஸோபாக்களில் வீற்றிருந்த சமயத்தில், மணி சரியாக எட்டு அடித்தது. அதே சமயத்தில் அவர்களது மாளிகையின் வாசலில் ஒரு பெட்டிவண்டி வந்து நின்றது. உடனே தஞ்சை இளவரசர் வண்டியிலிருந்து கீழே இறங்கினார். அவரைத் தொடர்ந்து மருங்காபுரி ஜெமீந்தாரான கிழவரும் கீழே இறங்கினார். வாசலில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த வேலைக்காரிகள் அவர்களுக்கெதிரில் தோன்றிக் குனிந்து வணங்கிக் கும்பிடு போட்டு அவர்களுக்கு வழிகாட்டி முன்னே நடக்க, விருந்தினரிருவரும் மேன்மாடத்திற்குச் சென்றனர். அவர்களது வண்டி பின்புறத்திலிருந்த லாயத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அந்த வண்டி மிகவும் சாதாரண ஜனங்கள் உபயோகிக்கத் தகுந்த வண்டியாக இருந்ததன்றி, இளவரசரும், ஜெமீந்தாரும் சிறிதும் படாடோபமின்றிப் பரம ரசகியமாக அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனரானாலும், அந்த மாளிகையின் பக்கத்திலிருந்த தென்னந்தோப்பில் ஒரு மரத்தின் மறைவில் இருளில் ஒளிந்திருந்த விகாரருபமுள்ள ஒரு மனிதன் அவர்கள் வந்ததைக் கண்டு இன்னார்தாம் வந்தனர் என்பதை உடனே உணர்ந்து கொண்டவனாகக் காணப்பட்டான். அவனுக்கு