பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79 முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கலாம். அவனது சரீரம் இரும்பினால் ஆனதோ, எஃகினாலானதோ, அல்லது கருங்கல் லினால் ஆனதோவெனக் காண்போர் ஐயுறத்தக்கபடி மிகவும் உறுதியானதாக இருந்ததானாலும், முகம் மாத்திரம் அரக்கனது முகம் போலப் பயங்கரமாக இருந்தது. வழிப்போக்கர் எவ்வளவு அபாரமான பலமும் துணிபும் பொருந்தியவராக இருந்தாலும், அந்த மனிதனைத்தனிமையில் காண்பாராயின் திகிலும் குலைநடுக்கமும் கொள்வரென்பது திண்ணம். அந்த முரட்டு மனிதன் மரத்தின் மறைவில் நின்றவண்ணம் இளவரசர் வந்து இறங்கியதைக் கண்டு களி கொண்டானானாலும் அவரோடு கூட மருங்காபுரி ஜெமீந்தாரும் வந்ததைக் காண அவனது சந்தோஷம் சடக்கென்று கவலையாக மாறியது. தான் கருதிவந்த காரியத்திற்கு இடையூறாக அந்தக் கிழவனும் வந்து சேர்ந்து விட்டானே என்ற ஆத்திரமும், பதைப்பும், அதிருப்தியும் கொண்டவனாய் அவன் அந்த மாளிகையின் பின்புற வாசலைப் பார்த்துக்கொண்டே யாரோ ஒருவரது வருகையை எதிர்பார்த்து நின்றான். அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது. அன்னத்தம்மாளது மாளிகையின் பின்புற வாசலின் வழியாக வெளிப்பட்ட ஒரு வேலைக்காரன் ஒசை செய்யாமல் விரல்களை ஊன்றி நடந்து தன்னை யாராகிலும் பார்த்துவிடப் போகிறார்களே என்ற அஞ்சுகிறவன் போல, அங்குமிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே தென்னந்தோப்பிற்குள் புகுந்து அவ்விடத்தில் ஒளிந்து நின்ற முரட்டு மனிதனண்டை போய்ச் சேர்ந்து, “என்ன, அப்பா கட்டாரி இளவரசர் வந்துவிட்டார். இந்த ராத்திரிக்குள் அவர் எப்படியும் திரும்பி அரண்மனைக்குப் போய் தான் தீருவார். ஆகையால் நீ போய் உங்களுடைய காரியத்தை நிறைவேற்றலாம். சமயத்துக்கு நானும் அங்கே வந்து சேருகிறேன்' என்று ரகசியமாகக் காதோடு கூறினான்.