பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பூர்ணசந்திரோதயம்-1 அதைக் கேட்ட கட்டாரி என்ற விநோதமான பெயரைக் கொண்ட அந்த முரட்டு மனிதன், "அடே கந்தா ராஜாவோடு கூட இன்னொரு கிழக்குரங்கு வந்திருக்கிறதே, அது யாரென்பது தெரியவில்லையே! என்றான். வேலைக்காரக் கந்தன் :- அவன் தான் மருங்காபுரி ஜெமீந்தார். அவனை நீ இதுவரையில் பார்த்ததில்லையா? கட்டாரி:- நான் பார்த்திருந்தால், உன்னை ஏன் கேட்கிறேன்? அதிருக்கட்டும். ராஜாமாத்திரம் வருவாரென்று நீ சொன்னாயே யன்றி இந்தக் கிழவனும் வருவானென்று என்னிடத்தில் சொல்லவில்லையே? - கந்தன்:- இவனும் வரப்போகிறானென்பது, இந்த வீட்டு எஜமானியம்மாளுக்கும் தெரியாது; பெண்களுக்கும் தெரியாது. ராஜா மாத்திரம் வருவாரென்றுதான் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கிழவனுக்கும் ராஜாவுக்கும் அதிக சிநேகமுண்டு. ஆகையால், ராஜாவே இவனையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம். அதனால் உனக்கென்ன பயமா? காலால் ஓர் உந்து உந்தினால் கிழட்டுநாய் எட்டுக் குட்டிக்கரணம் போட்டுக் கொண்டுபோய் வெட்டாற்றில் விழாதா? அவனைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? கட்டாரி:- (ஏளனாமாகப் புன்னகை செய்து) அப்படி இல்லை தம் பீ நான் அதுக்காக பயப்படவில்லை. எத்தனையோ வீராதி வீரர்களான பயில் வான்களையும் வஸ்தாதுகளையும் வாயில் போட்டுக்கொண்ட காசாநாட்டுச் சிங்கமாகிய இந்தக் கட்டாரித்தேவனைப் பார்த்து நீ அந்தப் பேச்சைச் சொல்லலாமா? மதயானையை யெல்லாம் கதற அடிக்கிற எனக்கு இந்த ஆட்டுக்குட்டி ஒரு பொருட்டா? நான் அதைச் சொல்லவில்லை. நாம் செய்யப்போகிற வேலையை ராஜா வெளியிட மாட்டார். இந்தக் கிழவன் ஒருவேளை வெளியிட்டு, அந்தச் செந்தலைப் புலிகளை ஏவிவிட்டுத்