பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 பூர்ணசந்திரோதயம்-2 என்பதை என்னுடைய வேலைக்காரர்கள் தெரிந்து கொள்வார்கள். ஆகையால், தாங்கள் ஒரு வண்டியை அந்தக் காலம் தவறாமல் அனுப்பி வையுங்கள். நான் அங்கே வந்து மற்ற சகலமான விஷயங்களையும் தங்களுடைய மனம்போல நிறைவேற்றி வைக்கிறேன். அதுவரையில் எப்படியாவது மகாராஜா பொறுத்து இந்த அடிமையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று கிள்ளைபோல மழலையாகக் கொஞ்சி மொழிந்தாள். அதைக்கேட்ட இளவரசரது உற்சாகமும், குதூகலமும் அணை போடப்பட்டதுபோலச் சடக் கென்று மாறிப்போனது. ஆனாலும், அவள்மீது கொண்ட காமவேட்கையும், தாக வெப்பமும் அடங்காமல் மும்முரமாகவே இருந்தன. இருந்தாலும், அவளது விருப்பத்திற்கும் ஏற்பாட்டிற்கும் தாம் இணங்குவது அவசியமாகவும் தோன்றியது. ஆகையால், இளவரசர் அவள் சொன்னதை ஒப்புக் கொண்டு, மறுநாள் அவசியம் வரவேண்டுமென்று அவளிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு கடைசி முறையாக அவளை இன்னொருதரம் ஆசையோடு ஆலிங்கனம் செய்து விடைபெற்றுக்கொண்டு, தனது அங்கியை எடுத்து மறுபடியும் அணிந்தவராய் ஸ்திரீ நடப்பதுபோலத் தளர் நடை நடந்து ஜெகன்மோகன விலாசத்தி லிருந்து வெளிப்பட்டு, ராஜபாட்டையில் நிறுத்தப்பட்டிருந்த தமது பெட்டி வண்டிக்குள் போய் உட்கார்ந்து கொள்ள, தாதியர் கதவை மூடிக்கொண்டு பின் பக்கத்துப் பலகையில் உட்கார்ந்து கொண்டனர். உடனே வண்டிபுறப்பட்டு அரண்மனையை நோக்கிச்செல்ல ஆரம்பித்தது. ஜெகன்மோகன விலாசத்தை விட்டு நெடுந்துாரம் போக, அப்போது இளவரசரது மனதில் தாம் மருங் காபுரி ஜெமீந்தாரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. அன்றையதினம் இளவரசர் பூர்ண சந்திரோதயத்தின் ஜாகைக்கு வந்து அவளை நெருங் கிப்