பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97 அவைகளைத் தாங்கள் பெண்ணுக்கு உண்டாக்கி வைக்கப் போகிறீர்கள் என்று சொல்வதே பொருத்தமானது. தேவாமிருதம் தானாகவே ஒருவருக்குக் கிடைக்குமானால் அதை அவர்கள் வேண்டாம் என்று சொல்லுவார்களா? ஒருநாளும் சொல்ல மாட்டார்கள். இந்த விஷயத்தில் தங்களுடைய மனம் எப்படி அபாரமான வேட்கை கொண்டதோ, அதுபோல, எங்கள் - எஜமானியம்மாள் மனதிலும் வேட்கை இருந்து வருகிறது. ஆகையால், இதைப்பற்றித்தாங்கள் இனி எவ்விதக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இந்த ஏற்பாடு முடிந்ததாகவே தாங்கள் பாவிக்கலாம். புரோகிதரைத் தருவித்து நல்ல முகூர்த்த நாள் ஒன்றை ஏற்பாடு செய்து தாங்கள் தெரிவித்தால், அதை நாங்கள் உடனே தஞ்சைக்கு எழுதித் தெரிவித்து, அவர்களையும் வருவிக்கிறோம். கலியாணத்துக்குத் தேவையான மற்ற ஏற்பாடுகள் எல்லாம் அதற்குள் சேகரமாகட்டும். குறித்த தேதியில் கலியாணத்தைத் தங்களுக்கு இஷ்டமான இடத்தில் நடத்தி விடலாம்- என்றாள். அதைக்கேட்ட கலியாணசுந்தரம் கட்டிலடங்கா இன்பமும் குதுகலமும் அடைந்தவனாய் வேலைக்காரியை நோக்கி மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, சரி; இன்றைய தினம் தஞ்சையிலிருந்து கடிதம் வந்ததைப் பார்த்தவுடனே இந்தக் கலியாணம் எப்படியும் ஈசன் செயலால் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கை என்மனசில் தோன்றியது. நான் உடனே புரோகிதரை வரவழைத்துப் பொருத்தம், நாள் முதலியவைகளைப் பார்க்கச் செய்தேன். பொருத்தம் நிரம்பவும் நன்றாயிருப்பதாக அவர் உறுதி சொன்னதன்றி, இன்னம் 10 தினங்களில் ஒரு முகூர்த்த நாள் இருப்பதாகவும், அன்றைய தினம் இதை நிறைவேற்றி விடலாம் என்றும் தெரிவித்தார். அன்றைய தினம் கலியாணத்தை நடத்திவிடலாமா என்பதையும், எனக்குத் திருவாரூரிலுள்ள ஜாகையும் இதைப் போலப் பெரிதாக இருந்தாலும், நம் இருவருக்கும் ஜனங்கள் அதிகமாக