98 பூர்ணசந்திரோதயம்-2 வரமாட்டார்கள் ஆகையால், பெரிய ஊரான அந்த இடத்தில் நடத்துவதைவிட இவ்விடத்திலேயே நடத்தி விடலாமா என்பதையும் உன்னுடைய சின்ன எஜமானியம் மாளிடம் கேட்டு எனக்குத் தெரிவி' என்றான். அதைக் கேட்ட முத்தம்மாள் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு உடனே அவ்விடத்தை விட்டு ஷண்முகவடிவு இருந்த அறைக்குள் நுழைய, அது காறும் அவர்கள் சம்பாஷித்திருந்த வார்த்தைகளை எல்லாம் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்த ஷண்முகவடிவு இன்பமோ துன்பமோ என்று பகுத்தறிய இயலாத மகா புதுமையான மன நிலைமையோடு நாணிக்குனிந்தபடி பக்கத்தில் இருந்த ஏதோ சாமானை வைத்து விரல்களால் விஷமம் செய்து கொண்டிருந்தாள். அவளிடம் போய் கால்நாழிகை நேரம் கலந்து யோசனை செய்து கொண்டிருந்த பிறகு முத்தம்மாள் அவ்விடத்தைவிட்டு மறுபடியும் கூடத்திற்கு வந்து வணக்கமாகவும் மரியாதையாகவும் அவரை நோக்கி, 'எஜமானே! தாங்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் நான் எஜமானியம் மாளிடம் தெரிவித்தேன். இதுவரையில் எந்த விஷயத்திலும் தங்கள் இஷ்டம்போல நடந்து கொண்ட்தைப் போலும், இனிமேலும் தங்கள் சித்தப்படியே நடந்து கொள்ளக் காத்திருக்கிறோம் என்பதை எஜமானியம்மாள் தங்களிடம் மனுச் செய்து கொள்ளச் சொன்னார்கள். தாங்கள் குறித்த முகூர்த்த தினத்தில் இந்த பங்களாவிலேயே கலியானத்தை நடத்துவது அவர்களுக்குச் சம்மதமானதே. ஆனால், தன்னு டைய மனசிலுள்ள முக்கியமான ஒர் ஆசையை மாத்திரம் அவர்கள் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். என்ன வென்றால், இந்தக் குடும்பத்திற்குத் தலைமையான பெரிய அம்மாள்காயலாவாகப் படுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் குடும்பத்துக்கு முக்கியமான எஜமானியம்மாள் தஞ்சையில் இருக்கிறார்கள். கலியாணப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் அந்த அம்மாளைவிட நெருங்கி அருமையான பந்து வேறே
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/102
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
