வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 யாருமிருக்கமாட்டார்கள். அவர்கள் எழுதியிருக்கிற கடிதத்தில் தாம் கலியாணத்துக்கு வருவது சந்தேகம் என்று எழுதி யிருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்தக் கலியாணத்தை முடிப்பது சின்ன எஜமானியம்மாளுக்குச் சம்மதமாக இல்லை. ஆகையால், எப்படியும் முயற்சி செய்து, அன்றைய தினம் மூத்த எஜமானியம்மாள் இங்கே வரும்படி நாம் செய்ய வேண்டும். நாங்களும் நாளைய தினம் அவர்களுக்குக் கடிதம் எழுதி, வரும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறோம். தாங்களும் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி அவர்கள் வந்து சேரும்படியான வழியைத் தேட வேண்டும்; அது ஒன்றுதான் நாங்கள் செய்து கொள்ளும்படியான வேண்டுகோள். மற்ற சகலமான ஏற்பாடுகளையும் முஸ் தீபுகளையும் தங்களுடைய பிரியப்படியும் மனப்போக்கின்படியும் செய்து கொள்ளலாம்' என்றாள்.
அதைக்கேட்ட கலியாணசுந்தரம் விவரிக்க இயலாதபடி பரம சந்தோஷம் அடைந்தவனாய், அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் ஒப்புக்கொண்டு, தான் உடனே போய் கமலத்திற்கு கடிதம் எழுதுவதாகச் சொல்லிவிட்டு, அவர்களிடம் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டான்.
பிறகு நான்கு நாட்கள் கழிந்தன. கமலத்தினிடத்திலிருந்து இன்னொரு கடிதம் வந்து சேர்ந்தது. அந்தக் கலியாணத்திற்கு ஷண்முகவடிவு இணங்கிவிட்டதைப் பற்றியும், அதற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுப் போனதையும் கேட்டுத் தான் அளவிறந்த சந்தோஷமும் பூரிப்பும் அடைவதாகவும், அவர்கள் இருவரும் கலியாணம் செய்துகொண்டு நீடுழிகாலம் அமோகமாக வாழவேண்டுமென்று தான் கடவுளைப் பிரார்த்திப்பதாகவும், சில அசந்தர்ப்பங்களைக் கருதி, தான் கலியாணத்திற்கு வர இயலாமல் இருப்பதாகவும், அதைப் பற்றி விசனிக்காமல் அந்த சுபகாரியத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்றும், கமலம் ஷண்முகவடிவிற்கும், கலியாண
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/103
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
