பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 பூர்ணசந்திரோதயம்-2 சுந்தரத்திற்கும் தனித்தனி கடிதங்களெழுதி அனுப்பியதன்றி, ஐந்நூறு ரூபாய்க்கு ஒர் உண்டியல், விலையுயர்ந்த சில ஆடையாபரணங்கள் முதலிய பொருட்களை எல்லாம் தனது தங்கைக்கு அனுப்பி வைத்தாள். அந்தக் கடிதத்தைப் படித்த இளநங்கை தனது அக்காள் கலியாணத்திற்கு வராததைப்பற்றி சகிக்க இயலாத விசனக் கடலில் ஆழ்ந்தவளாய்த் தனது அக்காளை எப்படியும் அழைத்து வந்துதான் அந்தக் கலியாணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேலைக்காரியிடம் கூற, அவள் மூலமாக அந்தச் செய்தியை உணர்ந்த கலியாணசுந்தரம் தானே நேரில் தஞ்சைக்குப் போய்க் கமலத்தைக் கண்டு பேசி அழைத்துக் கொண்டு வருவதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு தஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தான். జ్ఞ 16-வது அதிகாரம் தன் வலை தனக்கேயாம் மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையின் உப்பரிகையில் ரதிகேளி விலாசத்தில் நாற்காலியின்மீது உட்கார்ந்திருந்த பூர்ண சந்திரோதயம், அதன் பல இடங்களிலிருந்து இரும் பு வளையங்கள் சடெரென்று வெளிப்பட்டுத் தனது கால்கள், கைகள், இடுப்பு முதலிய இடங்களை இறுகப் பிடித்து அழுத்திக் கொண்டதையும், அடுத்த நிமிஷத்தில் மருங்காபுரி ஜெமீந்தார் பக்கத்தில் இருந்த ஒரு கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு விரைவாக அவளுக்கு முன்வந்து அவளைப் பலவந்தமாகத் தமது வசப்படுத்திக் கொள்ளப் போவதாக பெளரஷ மொழி கூறியதையும் கண்டு திடுக்கிட்டு திக்பிரமையும் பெருவியப்பும் கொண்டவளாய், ஒரு விநாடி நேரம் கலங்கி அந்த மகா அபாயகரமான நிலைமையில் தான்