பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 பூர்ணசந்திரோதயம்-2 தாங்கள் பற்பல தந்திரங்கள் செய்து அநாவசியமான பிரயாசை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்து நானே நேரில் தங்களுடைய சயன மாளிகைக்குள் வந்திருக்கிறேன். என்னைத் தாங்கள் இப்படி அவமானப்படுத்துவது முறையாகுமா?. என்மேல் தங்களுக்கு இருக்கும் பிரியம் இவ்வளவுதானா? யெளவன ஸ்திரீகளை இப்படி வதைப்பது ஒருவிதமான சுகம் என்று தாங்கள் கொக்கோக சாஸ்திரத்தில் படித்தீர்களா? அல்லது, நான் தங்கள் விஷயத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டேனா ஸ்திரீகளிடத்தில் தயையும், தளாயமும், இரக்கமும், உருக்கமும் காட்டுவதில் மகாப் பிரக்யாதி பெற்றவர்களான தாங்கள், என்னை இப்படி நரக வேதனைக்கு ஆளாக்குவது நம்பத்தகாத சங்கதியாக இருக்கிறதே! தங்களுடைய கைகளால் பிடித்து அணைக்கப்படத் தகுந்த என்னுடைய மிருதுவான அங்கங்கள் இந்த இரும்பு வளையங்களினால் நொறுக்கப்படுவதைக் காண தங்களுக்குச் சகிக்கிறதா? அல்லது, சந்தோஷமாக இருக்கிறதா?" என்று கிள்ளைபோலக் கொஞ்சி மொழிந்தாள். அவளது எதிர்பாராத கனிமொழிகளைக் கேட்ட ஜெமீந்தார் ஆனந்த பரவசம் அடைந்து, மிகுந்த வியப்பும் பூரிப்பும் அடைந்தவளாய் அதற்குமேல் அவளிடம் நெருங்கி வராமல் சிறிது தூரத்திலேயே நின்றுவிட்டார்; அவளைப் பலவந்தமாக ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவரது ஆவலும் ஆவேசமும் சடேரென்று தணிவடைந்தன. அவர் அவளை நோக்கி, மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் புன்னகை செய்தவராய், "ஆகா! என்ன ஆச்சரியம்! நாங்கள் ஆறு பேரும் சேர்ந்து உன் விஷயத்தில் பந்தயம் வைத்திருக்கிறோம் என்பது உனக்கு எப்படியோ தெரிந்து போயிருக்கிறதே!' எனறாா. பூர்ணசந்திரோதயம் மகிழ்ச்சியோடு, 'ஆம்; எனக்கு எல்லாம் தெரியும். இந்தப் பந்தயம் வைத்திருப்பதும் தெரியும். அதோடு,