பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 103 நான் இந்த வண்டியில் ஏறிக் கொஞ்சதூரம் வந்தவுடனே, அது தங்களுடைய மாளிகைக்குத்தான் வருகிறது என்பதையும், அந்த வண்டி தங்களுடையது என்பதையும் நான் உடனே தெரிந்து கொண்டேன்' என்றாள். அந்த மடந்தை பலவிதத்தில் திமிறித் தம்மைப் பலவாறு துற்றி இழிவான வசைமொழிகள் கூறி அவமானப் படுத்துவாள் என்று நினைத்து மிகுந்த கவலையும் அச்சமும் கொண்டிருந்த மருங்காபுரி ஜெமீந்தார், பணிவும் அன்பும் மிருதுவும் தோற்றுவித்த அவளது இனிய மறுமொழிகளைக் கேட்டு முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்பும் களிப்பும் அடைந்தவராய் சந்தோஷமாகவும் உருக்கமாகவும் அவளை நோக்கி, 'அப்படியா! இந்த ரகசியங்களையெல்லாம் உன்னிடத்தில் யார் வெளியிட்டது? நம்முடைய இளவரசர் வெளியிட்டாரா?' என்றார். பூர்ணசந்திரோதயம் மிருதுவான இனிய குரலில், 'புதன் கிழமை சாயுங்காலம் வம்புலாஞ் சோலைக்கு நான் போயிருந்த போது, அங்கே வந்து என்னைத் தொந்தரவு செய்த சூரக்கோட்டைப் பாளையக்காரர் உங்களுடைய ரகசியங்களை எல்லாம் வெளியிட்டார்' என்றாள். அப்போது விம்மி விம்மித் தணிந்த அவளது அழகிய மார்பகத்தை உற்று நோக்கிய பார்வையோடும் கட்டுக்கு அடங்கா மோகலாகிரியோடும் அவளிருந்த நாற்காலியண்டை ஜெமீந்தார் நெருங்கி வந்த வண்ணம், 'பெண்ணே! பூர்ணசந்திரோதயம்! நேற்றையதினம் இளவரசர் உன்னிடம் வந்திருந்த காலத்தில், நீ அவருடைய விருப்பத்துக்கு இணங்குவதாக ஒப்புக் கொண்டு விட்டாய் என்று நான் கேள்வியுற்றேனே! அது நிஜந்தானா?” என்றார். அதைக்கேட்டபூர்ணசந்திரோதயம் ஒருவாறு விசனமடைந்து உண்மையைப் பேசுகிறவள் போல நடித்து, 'ஆம்; அது உண்மை