பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 பூர்ணசந்திரோதயம்-2 தான். இன்றையதினம் ராத்திரி ஒன்பது மணிக்கு நான் பெட்டி வண்டியில் ஏறிக் கொஞ்சதுரம் வருகிற வரையில் அதே உறுதி யோடுதான் வந்தேன். ஆனால், இந்த வண்டி வடக்கு ராஜவீதிக்கு வந்த உடனேயே என் மனசில் பலமான சந்தேகம் உற்பத்தியாகி விட்டது. இந்த வண்டி இளவரசரால் அனுப்பப்பட்டது அல்ல என்றும், இது வேறு ஒருவரால் வஞ்சகமாக அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் நான் உடனே சந்தேகித்தேன். கடைசி வரையில் பொறுமையோடு இருந்து பார்க்க வேண்டும் என்ற நினைவோடு நான் பேசாமல் வந்து கொண்டிருந்தேன். கடைசியில் வண்டி தங்களுடைய மாளிகையின் வாசலில் வந்து நின்றதைக் கண்டேன். உடனே என்மனசுக்கு உண்மையெல்லாம் ஒரேநொடியில் பளிச்சென்று விளங்கிவிட்டது. நேற்று இரவு எனக்கும் இளவரசருக்கும் அந்தரங்கமாக நடந்த விஷயங்களை எல்லாம் அவர் தங்களிடத்தில் வெளியிட்டு விட்டதாகவும், நீங்கள் ஏற்படுத்தியுள்ள பந்தய ஏற்பாட்டின்படி இந்த வெள்ளிக்கிழமை தங்களுடைய முறையாகையால் தாங்கள் இப்படித் தந்திரம் செய்து அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்கள் என்றும் நான் உடனே நிச்சயப்படுத்திக்கொண்டு ஒருவிதத் தீர்மானமும் எனக்குள் செய்து கொண்டேன். இளவரசரிடத்தில் நான் வைத்த நம்பிக்கைக்குப் பதிலாக, அவர் அந்த ரகசியத்தை வெளியிட்டு நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொண்டதற்காக அவருக்குத் தக்க தண்டனை நடத்தி வைக்க நான் உறுதி செய்து கொண்டேன். அதாவது, உடனே தங்களுடைய மாளிகைக்குள் வந்து, தாங்கள் சொல்லும் ஏற்பாடுகளுக்கும் தங்களுடைய விருப்பத்துக்கும் இணங்கி நடக்கவேண்டும் என்பதே என்னுடைய முடிவான தீர்மானம்' என்றாள். அதைக் கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் தம்மை மறந்து ஆனந்தக் கூத்தாடி அளவில் அடங்கா வெறிகொண்டவராய், “என்கண்ணாட்டீ பூர்ணசந்திரா ஆகா இந்த விஷயமெல்லாம்