வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105. எனக்கு முன்னாகவே தெரிந்திருந்தால், உன்னுடைய மனம் இப்படி திடீரென்று எனக்கு அனுகூலமாக மாறப்போகிறது என்பதையும், இப்படிப்பட்ட நிகரற்ற பெரும் பாக்கியம் எனக்குச் சித்திக்க இருக்கிறது என்பதையும் நான் முன்னால் அறிந்துகொள்ள முடிந்திருந்தால், உன்னுடைய பொன்னடி அந்த வெல்வெட்டு மாடத்தில் பட்ட மாத்திரத்தில், நான் எப்படிப்பட்ட ஏற்பாடுகளோடு வந்து உன் காலில் வீழ்ந்து வணங்கி உனக்குப் பாத பூஜை செய்திருப்பேன்! இன்னமும் கூட, நீ சொன்னது எல்லாம் பொய்யோ மெய்யோ என்று என் மனம் சந்தேகப்படுகிறது' என்று கூறினார்.
உடனே பூர்ணசந்திரோதயம் மிகுந்த சந்தோஷமும் அன்பும் பூரிப்பும் தோற்றுவித்தவளாய்ப் பணிவான குரலில், "மகாப் பிரபுவே! நான்தலை போவதாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடியவளே அல்ல. ஆகையால்-நான் விஷயங்களை உள்ளபடி எடுத்துச் சொல்லுகிறேன். தாங்கள் செவி சாய்த்து நன்றாகக் கேட்டு அருளுங்கள். புதன்கிழமை சாயுங்காலம் சூரக் கோட்டைப் பாளையக்காரர் என்னைச் சந்தித்து இந்தச் சதியா லோசனைப் பந்தயத்தைப் பற்றிய விவரங்களை யெல்லாம் சொன்னதைக் கேட்டபின், என் மனசில் ஒரு பெருத்த திகில் உண்டாகிவிட்டது. இப்படிப்பட்ட உன்னத ஸ்தானத்திலுள்ள சீமான்கள் எல்லாரும் என் விஷயத்தில் இப்படிக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கையில், நான் இனிதப்ப முடியாது என்றும், இந்த வலையில் நான் யாரிடத்திலாவது அகப்பட்டே தீர வேண்டும் என்றும், ஒர் எண்ணம் என் மனசில் உண்டாயிற்று. ஆகையால், இந்த அறுவருள், அந்தஸ்தில், யார்எல்லோருக்கும் மேலானவரோ அவரை அடைந்துவிட வேண்டும் என்று நான் எனக்குள்ளாகத் தீர்மானித்துக் கொண்டேன். ஆகையால், நான் இளவரசரைப் பொறுக்கி எடுத்தேன். ஆனால், அவர் எங்களுக்குள் ரகசியத்தில் நடந்த ஏற்பாடுகளையும், ஒன்பது மணிக்கு எனக்கு வண்டி அனுப்புவதாகச் செய்திருந்த முடிவை
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/109
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
