பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பூர்ணசந்திரோதயம்-2 இடுப்பையும் கைகளையும் கால்களையும் கெட்டியாகப் பிடித்து அழுத்திக்கொண்டன. உடனே கிழவர் திடுக்கிட்டுத் திக்பிரமை கொண்டு திகிலடைந்து பூர்ணசந்திரோதயத்தை நோக்கித் திருடனைப் போல விழிக்கிறார்; குரங்குபோலப் பல்லைப் பல்லைக்காட்டுகிறார். அவள் தம்மை வேடிக்கையாக அப்படித் தள்ளிவிட்டிருப்பாளோ, அல்லது, உண்மையிலேயே தம்மை தண்டிப்பதற்காக அப்படிச் செய்திருப்பாளோ என்று ஐயமுற்றுக் கலங்கிக் கெஞ்சி மன்றாடுகிறவர் போல இறைஞ்சிய பார்வையாக அவளது முகத்தை உற்று நோக்கி அவளது முகக் குறிப்பை ஆராய்கிறார். அவரை நாற்காலியில் தள்ளிவிட்டபூர்ணசந்திரோதயம் உடனே அந்த இடத்தைவிட்டு சிறிது தூரம் விரைவாக நடந்து திரும்பி நின்றாள். அவளது முகத்தோற்றமும், பணிவானதன்மையும் உடனே சடக்கென்று மாறிப்போயின. அவள் மிகுந்த வீராவேசமும் கோபமும் கொண்டவளாய் தேகம் பதறித் துடிதுடிக்க நின்று அவரைக் கேவலம் ஒரு புழுவைக் காட்டிலும் இழிவாக மதிக்கிறவள் போல அருவருப்பான பார்வையாகப் பார்த்து, "அயோக்கியப் பதரே! பல்லும் போய் பவிஷ-ம் போய் சாகமாட்டாமல் கிடக்கும் நடைப்பினத்துக்கு வைப் பாட்டி ஒரு கேடா நீ கெட்ட கேட்டுக்குக் கண்ணாடி மண்டபம் ஒன்று; அறுபத்துநான்கு லீலைகள் செய்ய அறுபத்து நான்கு வித மஞ் சங்கள்! அதற்குத் தகுந்த படங்கள் அடாடா என்ன கேடுகாலம்! எப்படிப்பட்ட சூதான நாற்காலிகள்! இந்தக் கிழட்டு மன்மதரிடம் காதல் கொண்டு வராத ஸ்திரிகளை நாற்காலிகளில் சிறை வைத்து அவர்களை வசப்படுத்துகிறதாம்! எவ்வளவு நெஞ்சழுத்தம்! எவ்வளவு துர்ப்புத்தி என்ன பைத்தியம்! என்ன மூட நினைவு.! உன்னைப் பார்த்தால், சாகப்போகிற கிழக்குரங்கு மாதிரி இருக்கிறது. நீ செய்கிற அட்டுழியமோ அபாரமாக இருக்கிறதே து! நீ ஒரு பெரிய மனிதனா! எனக்கு உண்டாகும் ஆத்திரத்தில் இப்போதே கூச்சலிட்டு கீழே இருக்கும் உன்னுடைய வேலைக்காரர்