பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 > பூர்ணசந்திரோதயம்-2 அவரது பண்ணிவையும் பரிதாபத்தையும் கண்ட பூர்ன சந்திரோதயத்தின் அருவருப்பும் குரோதமும் ஒருவாறு தணிவ டைந்தன. அவள் முன்போல அவரிடத்தில் மரியாதையாகப் பேசத் தொடங்கி, 'இல்லை இல்லை. இந்தக் கதவு இருக்கும் இடம் எனக்குத் தெரிந்தால் தெரியட்டும், தெரியாவிட்டாலும் கவலை இல்லை. நான் உம்மை மாத்திரம் விடுவிக்கமாட்டேன். இந்தக் கதவு எங்கே இருக்கிறது என்று நீர் சொல்லாவிட்டால், நான்' மறுபடியும் வெல்வெட்டு மாடத்துக்குப் போய், ஜன்னலின் கண்ணாடிக் கதவை உடைத்துக் கூச்சலிட்டு ரஸ்தாவில் போகும் மனிதரைக்கூப்பிட்டு என்னைவிடுவிக்கும் படி செய்கிறேன். அவர்கள் வந்து உம்மை இந்த நிலைமை யில் பார்க்கும்படியான இழிவுக்கு நீர் சம்மதிக்கிறீரா? அப்படி வந்து கூடும் ஜனங்களிடத்தில் நான் இங்கே வந்த வரலாற்றை պա நீர் செய்த் சதி ஆலோசனையின் விவரத்தையும் உமக்கு முன்னாகவே எடுத்துச் சொல்ல நேரிடும். அது உமக்கு இஷ்ட மானால், அப்படியே செய்கிறேன்' என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினாள். அவள்து சொற்களைக் கேட்ட ஜெமீந்தார் சிறிதுநேரம் கீழே குனிந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்து மறுபடியும் நிமிர்ந்து அவளை நோக்கி, ‘சரி; உனக்கு அப்படிப்பட்ட பிரயாசை கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. அந்த ரகசியமான கதவைத் திறப்பதற்கு நான் வழி காட்டுகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக நீ எனக்கு ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும். சம்மதமானால், நான் உடனே ரகசியத்தை வெளியிடுகிறேன்" என்றார். - - பூர்ணசந்திரோதயம், "உம்மை விடுவிப்பதைத் தவிர வேறு விதமான சிறிய உதவி எதுவாக இருந்தாலும், அதை நான் செய்யத் தடையில்லை” என்றாள். - ஜெமீந்தார், 'சரி, அப்படியே ஆகட்டும். அதோ சுவரில் காகிதங்களினால் ஒட்டு வேலை செய்யப்பட்டிருக்கிறதைப்