பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 115 பார். அதில் சிகப்புக் காகிதத்தினால் ரோஜாப் புஷ்பங்கள் செய்து ஒட்டப்பட்டிருக்கின்றன அல்லவா. அந்தப் புஷ்பங்களில் நடுவில் இருக்கும் புஷ்பத்தின் மேல் விரலை வை. அதற்குள் மறைந்திருக்கும் விசை உடனே கதவைத் திறந்து விடும். அந்த வழியாகப் போனால் படிகள் இறங்கும். அப்படியே நீ கீழே போய் ச் சேர்ந்தவுடன் என்னுடைய வேலைக்காரர்களைக் கண்டு, என் அந்தரங்கக் காரியதரிசியான கோவிந்தசாமியை நான் இந்த அறைக்கு உடனே வரச் சொன்னதாகச் சொல்லிவிட்டு நீ வெளியில் போய் விடு! அவ்வளவுதான் நீ எனக்குச் செய்ய வேண்டிய உதவி' என்றார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு சுவரண்டை போய் அவர் குறித்த ரோஜாப் புஷ்பத்தின்மீது விரலை வைக்க, உடனே பக்கத்தில் ஒரு கண்ணாடிக் கதவு திறந்துகொண்டது. அதைக் கண்டு மிகுந்த மனவெழுச்சியும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அடைந்த அந்தப் பெண்பாவை அதன் வழியாக அப்பாற் செல்ல, அவ்விடத்தில் படிக்கட்டு கீழே இறங்கியதைக் கண்டு, அதன் வழியாக தடதட்வென்று கீழே இறங்கினாள். 17-வது அதிகாரம் பு தை ய ல், அன்றைய தினம் இரவில் பதினைந்து நாழிகை நேரமிருக்கலாம். சந்திரன் பகல் போன்ற நிலவையும் சீதளத்தையும் இன்பத்தையும் மண்ணுலகம் முழுதும் பரப்பிய வண்ணமும் ஆகாயத்தில் ஒட்டமாக ஓடிக்கொண்டி ருந்தான். பூமி தேவியும் அதன் மக்களான கோடானுகோடி ஜீவஜெந்துக்களும் நித்திரையில் ஆழ்ந்து இருந்தமையால், எங்கும் நிசப்தமே குடிகொண்டிருந்தது. அப்போது தஞ்சையிலி