பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 பூர்ணசந்திரோதயம்-2 அதிகமாக நடுங்கி, "என்ன இது இன்றைய தினம் சாயுங்காலம் நீங்கள் நம்முடைய ஜாகைக்குத் திரும்பி வந்த பிறகு செய்யும் காரியம் ஒவ்வொன்றும் இன்னது என்று அறிந்துகொள்ள முடியாத பைத்தியக்காரச் செய்கையாக இருக்கிறதே. நீங்கள் ராத்திரிப் பத்து நாழிகை சமயத்தில் திடீரென்று வந்து படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பினர்கள். அவசரமாக ஓரிடத்துக்குப் போக வேண்டும். ஆகையால் உடனே புறப்படு என்கிறீர்கள். நானும் உங்களுடைய வார்த்தையை மறுக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு உடனே புறப்பட்டு வந்தேன். எந்த இடத்துக்கு எப்படிப்பட்ட அவசர காரியமாக நாம் போகிறோம் என்று நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டுப் பார்த்தும், நீங்கள் சொல்லாமல் என் மேல் சீறி விழுந்தீர்கள். அதுமுதல் என்னுடைய உடம்பு பயத்தினால் நடுங்குகிறது. மனம் கலங்கித் தவிக்கிறது. முன்பு ஒருநாள் ராத்திரி விருந்துக்குப் போயிருந்த நீங்கள், திடீரென்று திரும்பி வந்து, கோபண்ணாராவைக் கொன்று விட்டதாகவும், உடனே மைசூருக்குப் புறப்பட வேண்டும் என்றும் சொன்னீர்கள். அதைப்போல இன்றைக்கும் ஏதாவது அபாயத்தில் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களோ என்று நினைத்துப் பெரும் திகில் கொண்டு என் மனம் தத்தளிக்கிறது. நாம் மைசூரை விட்டுத் திரும்பிவந்த இந்த ஒருவார காலமாக நாம் வேறே பெயர் வைத்துக் கொண்டு மாரியம்மன் கோவில் என்ற ஊரில் ஒளிந்து கொண்டிருந்தோம். நீங்கள் நாம் இறங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியில் போகவே இல்லை. இன்று சாயுங்காலம் தஞ்சைக்குப் போய் விட்டு உடனே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனிர்கள். போனவர் பத்து நாழிகைக்குத் திரும்பி வந்தீர்கள். வந்தவுடன் சங்கதி இன்னது என்று வெளியிடாமல் உடனே பிரயாணப்பட்டு என்னை அழைத்துக் கொண்டு வந்தீர்கள். இப்போது பார்த்தால், நாம் முன்னே வசித்த ஜாகை இருக்கும் வெண்ணாற்றங்கரைக்கு