பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125 தன்மேல் சந்தேகம் கொண்டு அவ்வாறு கோபங்கொண்டு தன்னை அழைத்து வந்திருக்கிறார் என்றும், தன்னை மேன்மாடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் நூலேணியைத் தனக்குக் காட்டியபிறகு தன்னை மறுபடியும் அழைத்துக் கொண்டுபோய் தன்னை உயிரோடு அந்தக் குழியில் தள்ளிப் புதைத்துவிடத் தீர்மானித்திருக்கிறாரோ என்றும் அந்த மங்கை சந்தேகித்தாள். ஆகையால், அவளது கால்கள் மெத்தைக்குப் போகமாட்டாமல் பின்னுக்கு வாங்கின. தூக்கு மேடைக்கு அழைத்துக்கொண்டு போகப்படும் மரண தண்டனைக் குற்றவாளிபோல அவளது மனம் சகிக்க இயலாத சஞ்சலமும் திகிலும் நிறைந்து பரமவேதனை அடைந்து வெதும்பியது. அவர் அடிக்கடி அவளை வைது ஊக்கியதைக் கண்டு பயந்தே அவள் மேலே ஏறிச் சென்றாள். தனது ரகசியம் எல்லாம் தெரிந்துபோய் விட்டது. ஆகையால், தான் எப்படியாகிலும் துணிந்து சமயோசிதமான தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும், அவளது கோழை மனது முன்னிலும் அதிகமாக அஞ்சித் தளர்வடைந்ததே அன்றித்துணிவு கொள்ளவில்லை. அவளது புருஷர் கையில் பிடித்த லாந்தரோடு படிக்கட்டைக் கடந்து எதிரில் இருந்த ஒரு கூடத்தை அடைய, அந்தப் பெண் அவருக்குப் பின்னாகவே வந்து கொண்டிருந்தாள். அவர்களது உடம்பின் நிழல்கள் பயங்கரமாக நீண்டு சுவரில் விழுந்து பேய்கள் போலத் தோன்றியதும், நிர்மாதுஷ்யமாகவும் நிசப்தமாகவும் இருந்த அந்த இடத்தில் அவர்கள் இருவரும் நடந்த தனிமையான ஓசை உண்டானதும் அந்த மடந்தையின் உடம்பை அடிக்கடி கிடுகிடென்று ஆட்டி வைத்தன. அவள் அந்தப் பரமசங்கடமான நிலைமையைச் சகிக்க மாட்டாமல் வாயைத் திறந்து கோவெனக் கதறியழத் தொடங்கினாள். அதைக் கண்ட புருஷர் மிகுந்த ஆத்திரமும் கோபமும் கொண்டு அவளை நோக்கித் தமது பற்களை நறநறவென்று கடித்து,