பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 பூர்ணசந்திரோதயம்-2 “என்னடி பெருத்த சாகலம் செய்கிறாய்? ஏன் இப்படி அழுது ஊர் கூட்டுகிறாய்? வாயை மூடிக்கொண்டு வரப் போகிறாயா? இல்லையா? உன்னுடைய ரகசியத்தைக் கண்டு கொண்டேன் என்று நினைத்து, இப்படி அழுது பாசாங்கு செய்கிறாயா? இப்படிச் செய்தால், நீ பரிசுத்தமானவள் என்று நான் நினைத்துக் கொள்வேன் என்ற எண்ணமா? இந்த நாடகம் எல்லாம் என்னிடம் பலிக்காது. இப்போதே ஏன் அழுகிறாய்? இன்னம் கொஞ்ச நேரத்தில் நீ ஒப்பாரி சொல்லி நன்றாகக் கதறி அழவேண்டிய சந்தர்ப்பம் வரும்; இதற்குள் ஏன் அழுகையைத் தொடங்குகிறாய்?' என்று கூறியவண்ணம், அவளது கையை இறுகப் பிடித்து அவளைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு அந்தக் கூடத்தின் வழியாக நடந்து அதற்கு அப்பாலிருந்த சமையல் அறைக்குப் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தவர் அவ்விடத்தில் நிற்காமல் விரைவாக மேலும் நடந்து பக்கத்தில் இருந்த ஸ்நான அறைக்குச் சென்றார். அதைக் கண்ட அந்த மடந்தையின் மனோதிடம் முற்றிலும் அடியோடு விலகிவிட்டது. அவளது இருதயம் படீரென்று தெரித்து விடக்கூடிய நிலைமையை அடைந்தது. குடிவெறிகொண்டு மயங்கிக் கீழே விழுகிறவனது சரீரம் போல, அவளது உடம்பு தள்ளாடித் தள்ளாடிக் கீழே சாய்ந்தது. அவள் தனக்கு எதிரில் இருந்த கட்டிலின்காலை உடனே பிடித்துக்கொண்டு சமாளித்து நின்றாள். அப்போதுதான் அவளுக்கு உண்மை இன்னதாக இருக்கும் என்பது தெரிந்தது. உடனே அவளது மூளை குழம்பியது. தலை சுழன்றது. கண்கள் பஞ்சடைத்து போயின. அவளது அடிவயிற்றிலும் மனதிலும் தேள்கள் லக்ஷம் கோடியாக இருந்து கொட்டி வதைப்பது போன்ற வேதனையும் சங்கடமும் உண்டாயின. அந்தச் சமயத்தில் அவளது புருஷர், 'ஏன் அங்கேயே நிற்கிறாய் வா இப்படி?" என்று பதைப்பாகவும், கோபமாகவும் அதட்டிக் கூறி, அவளை ஸ்நான அறைக்குள் அழைத்த ஒசைவந்து அவளது செவிகளில் மோதின. அதைக்கேட்ட அந்த மாது மறுபடியும் தனது மனத்தை ஒருவாறு