பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 127 திடப்படுத்திக்கொண்டு மெதுவாகத்தளர்நடைநடந்து உயிரற்ற சவம்போலச் சென்று ஸ்நான அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவுடனே, சகிக்க இயலாத ஒருவித துர்க்கந்தம், அந்த அறை முழுவதும் நிரம்பி இருந்தது ஆகையால், அது அவளது நாசியில் வந்து பலமாகத் தாக்கியது. உடனே அவளது வயிற்றில் புரட்டலும், ஒக்காளமும் உண்டாயின. அவள் தனது சேலைத் தலைப் பால் தனது மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு தனது கணவன் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள். அவர் அவளைப் பார்த்து ஏளனமாகப் புன்னகை செய்து, 'ஏன் இப்படி அவஸ்தைப் படுகிறாய்? இந்தத் தவலைக்குள் உன்னுடைய ஆசை நாயகர் ஒளிந்து கொண்டிருக்கிறார்; நீ வந்து அவரைப் பார்த்து வெளியில் கூப்பிட்டால்தான் அவர் வருவாராம்; இல்லாவிட்டால் வரமாட்டாராம். நீ ஆசையோடு அணைந்து கொண்ட மனிதருடைய உடம்பிலிருந்து உண்டாகும் இந்தப் பரிமள கந்தத்தைக் கண்டு நீ ஆனந்தமடைய வேண்டியிருக்க, ஏன் இப்படி அவஸ்தைப் படுகிறாய்? வா இப்படி; சீக்கிரம் வந்து கூப்பிடு' என்று புரளியாகக் கூறியவண்ணம், தமது கையில் இருந்த லாந்தரைப் பக்கத்துச் சுவரில் இருந்த ஒரு மாடத்தில் வைத்து விட்டு வென்னீர் அண்டாவின் மேல் இருந்த மூடியைத் திறந்தார். திறந்தவுடனே அண்டாவிற்குள்ளிருந்து துர்நாற்றம் கு.பிரென்று கிளம்பி வெளிப்பட்டு அந்த அறை முழுதும் முன்னிலும் அதிகமாகச் சூழ்ந்து கொண்டது. வென்னர் அண்டாவிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த அந்தப் புருஷரது மூக்கில் துர்நாற்றம் திடீரென்று வந்து தாக்கவே, அவருக்கு இரண்டொரு நிமிஷம் வரையில் மூச்சுத் திணறித் திக்குமுக்கால் ஆடியது. இருமலும் வாந்தியும் உண்டாயிற்று. அவர்அவ்விடத்தில் நிற்கமாட்டாமல் விரைவாகச் சுவரண்டை ஒடி இரண்டு மூன்று ஜன்னற் கதவுகளைத் திறந்துவிட, உடனே g-5.H-9