பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129 அவனை வெளியில் அழைத்து கடைசியாகக் கட்டி ஆலிங்கனம் செய்துவிட்டு வர நினைத்தாயோ, அல்லது, இதற்குள் கிடக்கும் நூலேனியை எடுத்து உள்ளே போட்டுவிட்டு வர நினைத்தாயோ என்னவோ தெரியவில்லை. நீ இப்படி இந்தப் பெரிய மனிதரை ஒளிய வைத்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரிந்திருந்தால், உன்னைக் கூப்பிடாமல் இங்கே இருக்கவிட்டு, நீங்கள் இருவரும் சுகமாக இருங்கள் என்று வாழ்த்துப் பாடிவிட்டு நான் மைசூருக்குப் போயிருப்பேன். உண்மையை மறைத்து வீணாகக் காரியத்தைக் கெடுத்துக் கொண்டாயே, நடந்தது நடந்து போய்விட்டது. இனி நீ விசனப்படுவதிலாவது பாசாங்கு செய்வதிலாவது எவ்வித உபயோகமும் இல்லை. உள்ளே இருக்கிறவரை வெளியில் எடுத்துப் போடு. நான் அவரைத் தொடமாட்டேன். நீ தான் எடுக்க வேண்டும் ' என்று கூறியவண்ணம், அதட்டி அவளைத் தூண்ட, அவள் திருட்டுவிழி விழிக்கிறாள். அவளது உடம்பு அபாரமான திகிலினால் கட்டுக்கு அடங்காமல் முறுக்கிக் கொண்டு வெடவெடவென்று நடுங்குகிறது. அவள் ஏதோ பேச முயற்சி செய்கிறாள்; வாய் குழறிப் போகிறது. கைகளை அண்டாவிற்குள் விட முயல்கிறாள். கைகள் சுவாதீனப் படாமல் முறுக்கிக் கொண்டு தாறுமாறாகப் போகின்றன. அவள் உடனே தனது கணவனது காலடியில் வேரற்ற மரம்போல விழுந்து, "ஐயோ! எனக்கு மயக்கமாக இருக்கிறதே! நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே. நான் யாரோ ஆசை நாயகனை வைத்திருந்ததாகச் சொல்லுகிறீர்கள். அன்றையதினம் நான் அவரை அண்டாவில் ஒளிய வைத்ததாகச் சொல்லுகிறீர்கள். இப்படிப்பட்ட அபாண்டமான பழியை நீங்கள் என்மேல் சுமத்துவது அடாது. இவன் யாரோ திருடன் போலிருக்கிறது; நூலேணி வைத்து ஏறி வந்திருக்கிறான். ஜனங்கள் நடமாட்டமாக இருந்ததைக் கண்டு இதற்குள் ஒளிந்துகொண்டிருக்கிறான்; பிறகு வெளியில் வரமாட்டாமல் இதற்குள்ளேயே இறந்துபோயிருக்க