பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 பூர்ணசந்திரோதயம்-2 இவ்வளவு அருவருப்பும் பயமும் உண்டாக வேண்டிய காரணம் என்ன?" என்றார். அதைக்கேட்ட அந்தப்பெண் முன்னிலும் பலமடங்கு அதிக உருக்கமாகக் கரைந்து அழுது, 'என் விஷயத்தில் இவ்வளவு rமையாகவும் பட்சமாகவும் நடந்து என் மானத்தைக் காப்பாற்றும் தாங்களே இந்தப் பிணத்தையும் வெளியில் எடுக்கக் கூடாதா? என்னை பயமுறுத்த வேண்டுமா?’ என்றாள். அதைக்கேட்ட அந்தப் புருஷர், 'ஓகோ அப்படியா! நீ பலே கைகாரி நியாயமாகப் பார்த்தால் என் விஷயத்தில் துரோகமாக நடந்து இப்படிப்பட்ட காரியம் செய்த நீதான் இவனை மறைப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும். நான் இந்தப் பிணத்தைத் தொடக்கூட நியாயமில்லை. எழுந்திருக்கிறாயா, அல்லது உன்னையும் தூக்கி இதற்குள் போட்டு இதன் வாயை மூடி இப்படியே அண்டாவோடு கொண்டுபோய் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்துப் புத்ைத்துவிடச் சொல்லுவேன். அதன்பிறகு நீயும் உன்னுடைய ஆசை நாயகரும் அண்டாவிற்குள் ஆனந்தமாக லீலைகள் செய்தபடியே கைலாசம் போய்ச் சேரலாம் ' என்று கூறியவண்ணம், தமது முழுபலத்தையும் இரு கரங்களால் உபயோகப் படுத்தி, அந்த அழகிய மடந்தையை ஒரு குழந்தையை எடுப்பது போலத்துக்கி எடுத்து அண்டாவிற்குள் திணிக்க அவள் கரைகடந்த கிலியும் கட்டில் அடங்கா நடுக்கமும் அடைந்தவளாய், "ஐயோ! என்னைக் கொல்லா தீர்கள். நீங்கள் சொன்னபடியே நான் செய்கிறேன். இதோ பிணத்தைத் தூக்குகிறேன்' என்று கூறியவண்ணம் அண்டாவிற்குள் நின்றபடி கீழே குனிந்து அதற்குள் அழுகி நீராக ஒடிக் கொண்டிருந்த பிணத்தை மேலே தூக்க, அதன் கைகளும் கால்களும் அப்படியப்படியே இற்று வெவ்வேறாக விழுந்தன. அவள் சுவாசம் வாங்காமல் மூச்சை ஒடுக்கிக் கொண்டபடியே அந்த வேலையை விரைவில் செய்தாள்.