பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பூர்ணசந்திரோதயம்-2. அதைக் கேட்ட கட்டாரித்தேவன், "வேலையை முடிக்காமல் நான் இங்கே வருவேனா குழி சரியாக இருக்கிறது. இவ்வளவு சின்ன மூட்டையைத் தூக்குவதற்கு இரண்டாள் எதற்கு? மூன்றாள் எதற்கு? நான் இதைப் போலப் பத்து மூட்டைகளை ஒன்றாகச் சேர்த்துத் தூக்குவேனே! இதற்கு நீங்களும் வரவேண்டுமா? அந்த இருட்டில் அனாவசியமாக எஜமானி யம்மாளையும் எதற்காக அழைத்துக் கொண்டு வர வேண்டும். நீங்கள் அம்மாளை அழைத்துக்கொண்டு நீங்கள் இருக்கும் இடத்துக்குப் போய்ச் சேருங்கள். நான் இந்த மூட்டையை எடுத்துக்கொண்டுபோய் குழியில் போட்டுப் புதைத்து, தரையைச் சரிப்படுத்திவிட்டு மறுபடியும் வந்து சாணியினால் இந்த அண்டாவையும் அறைகளையும் நாற்றமில்லாமல் சுத்தம் செய்துவிட்டு கதவைப் பூட்டிக் கொண்டு தங்களுடைய ஜாகையில் திறவுகோலைக் கொண்டு வந்து கொடுக்கிறேன். தாங்கள் நேரில் இருந்து காரியத்தை நடத்த வேண்டும் என்று அவசியமில்லை. போகலாம்' என்று கூறினான். அதைக் கேட்ட அந்தப் புருஷர் அவனை நம்பி எல்லாக் காரியங்களையும் செய்யும் படி விடக்கூடாது என்ற அச்சங் கொண்டார். ஆனாலும், அவனுடைய விருப்பத்திற்கு மாறாகத் தாம் நடந்து கொண்டால், அவனிடத்தில் நாம் அவநம்பிக்கைப் படுவதாக அவள் நினைத்து விடுவான் என்ற எண்ணம் கொண்டவராய் அந்தப் புருஷர் அவன் சொன்ன ஏற்பாடுகளை ஒப்புக் கொண்டார். உடனேகட்டாரித்தேவன்அந்த மூட்டையை அலட்சியமாகத் துக்கிக் கையில் பிடித்துக்கொண்டவனாய், அவர்களிடம் விடைபெற்று அவ்விடத்தை விட்டு வெளியில் போய் விட்டான். அவன் மெத்தைப் படிகளின் வழியாகக் கீழே இறங்கிவிட்டான் என்பதை அவனது காலடி ஒசையிலிருந்து நிச்சயித்துக் கொண்ட அம்மனிதர், உடனே லாந்தரை எடுத்துத் தமது கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரத்திற்குமுன்